Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதயனின் பொய்
#20
வணக்கம் தணிக்கையாகிய சேது...
எதற்கும் நான் நாளை பார்ப்போம் என நேற்றே சொல்லிவிட்டேன். அதனால் இன்று நானாகவே பதில் தருகின்றேன். உதயன் விடுதலைப்புலிகளின் மறுப்பையும் போட்டிருக்கின்றுது. இதோ உங்களிற்காய் அந்த மறுப்பு செய்தி...


04-11-2003
சிரேஷ~;ட அமைச்சர்கள் எவரும்
புலித்தேவனைச் சந்திக்கவில்லை
விடுதலைப்புலிகள் மறுப்பு
சிரே~;ட அமைச்சர்கள் நால்வர் வவுனியாவில் புலித்தேவனைச் சந் தித்துப் பேசினர் என்று ஊடகங்களில் வெளியாகிய செய்தியை விடுதலைப் புலிகள் மறுத்திருக்கின்றனர். தென் பகுதி ஊடகங்கள் வெளியிட்ட இந் தச் செய்தி நேற்றைய உதயனிலும் பிரசுரமாகியிருந்தது.
இது தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசி யல்துறை நடுவப் பணியகம் அனுப்பி யுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது:-
சிறிலங்கா அரசின் நான்கு மூத்த அமைச்சர்கள் வவுனியாவுக்குச் சென்று விடுதலைப் புலிகளின் சமாதானச் செய லகச் செயலர் புலித்தேவனுடனும் ஏனைய பிரதிநிதிகளுடனும் இடைக் கால நிர்வாக வரைவு தொடர்பாக கலந்துரையாடியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி முற்றிலும் தவறா னது.
இடைக்கால நிர்வாக வரைவு கடந்த 31ஆம் திகதியன்று கிளி நொச்சியில் வைத்து தமிழீழ அரசி யல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனால் இலங்கைக்கான நோர் வேத் து}தர் ஹான்ஸ் பிரட்ஸ்கரிடம் உத்தியோகபுூர்வமாக கையளிக்கப் பட்ட நிகழ்வின்போது, எதிர்காலத்தில் இடைக்கால நிர்வாகம் தொடர்பாக பேச்சுக்களில் புலிகள் பங்குபற்றத் தயாராக இருப்பதாகவும், அதற்கான ஒழுங்குகளை நோர்வே அனுசரணை யாளர்களே மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இலங்கைத் தீவில் ஒரு நிரந்தர மான அமைதித் தீர்வை ஏற்படுத்து வதற்காக தொடர்ச்சியாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நோர்வே அரசின் முயற்சிகளில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் புூரண திருப்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் முற் றிலும் பொய்யான செய்திகள் சமா தான முன்னெடுப்புகள் தொடர்பாக வெளிவருவது தமிழ் மக்களையும் நோர்வே அனுசரணையாளர்களையும் சர்வதேச சமூகத்தையும் முற்றிலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதற்கே துணைபுரியும்.
எதிர்காலத்தில் இடம்பெறும் எந்த விதமான சமாதானப் பேச்சுக்களும் நோர்வே அனுசரணையாளர்களின் புூரண ஆதரவோடும் ஒத்துழைப்போடும் இடம்பெறவேண்டும் என்பதே புலி களினதும் தமிழ் மக்களினதும் முழு மையான விரும்பமும் நிலைப்பாடும்.
இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள், தீர்வு முயற்சிகள் எதுவுமே அனுசர ணையாளர்களுடனானதாகவும் அதி காரபுூர்வமானதாகவும் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்பதை தெளிவாக முன்வைக்கிறோம். ஊடகங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு அனைவரை யும் குழப்பத்தில் ஆழ்த்துவதையும் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் நட வடிக்கைகளில் ஈடுபடுவதையும் நாம் கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இவ் வாறான நடவடிக்கைகளை தவிர்த் துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கி றோம்.
- இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

03-11-2003
சிரேஷ்ட அமைச்சர் நால்வர்
புலித்தேவனை சந்தித்துப் பேச்சு
அரசின் சிரே~;ட அமைச்சர்கள் நால்வர், புலிகளின் சமாதான செய லகப் பணிப்பாளர் புலித்தேவன் தலை மையிலான பிரதிநிதிகளை வவுனி யாவில் நேற்று சந்தித்து புலிகள் சமர்ப் பித்த இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடி யுள்ளார்கள்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர் களான ராஜித சேனாரத்ன, ரவி கருணா நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதில் வரைவு தமது சர்வதேச - சட்ட வல்லு நர்களின் ஆலோசனைகளுடன் மிக வும் நுணுக்கமாக ஆராயப்பட்டுத் தயா ரிக்கப்பட்டது என்றும் -
இந்த வரைவை அரசு நிச்சயம் ஏற்றுகொள்ளும் என்றும் -சந்திப்பில் கலந்துகொண்ட புலி களின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரி வித்தனர்.
இந்த யோசனைகள் தொடர்பாக இரு தரப்பினரும் விரிவாகப் பேச்சு நடத்த முடியும் என்றும் -
பேச்சு நடபெறும் போது பலதரப் பட்ட கருத்துக்கள் வெளிவரலாம். அவை தவிர்க்க முடியாதவை என்றும் அவர்கள் கூறினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசுகை யில் -
புலிகள் முன்வைத்துள்ள யோச னைகள் பல நல்லவை| சில குறித்து எதிர்காலத்தில் பேசலாம்| இன்னும் சில விடயங்கள் திருத்தப்படவேண்டியவை| சிலவற்றை முற்றாகவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று தாங்கள் கூறினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரி வித்தார்.
எனினும், இந்த யோசனைகள் குறித்துத் தெளிவாகப் பேச்சுநடத்தி னோம். முடிவுகளை எட்டுவதற்கு எவ் வளவு காலம் செல்லும் என்று தற் போது கூற முடியாது என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.
புலிகளின் வரைவு தொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்கள் ஒருபுறம் நடை பெறும் அதேவேளை, தங்கள் மட்டத் தில் தாம் புலிகளின் பிரதிநிதிகளு டன் பிரத்தியேக பேச்சுக்களை தொடர்ந்து நடத்தவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
தமது இயக்கம் மீண்டும் யுத்தத் திற்குச் செல்லாது என்றும் தனி நாட் டுக் கோரிக்கைகளையும் தமது அமைப்பு கைவிட்டுவிட்டது என்றும் - புலிகள் இச்சந்திப்பில் கூறினார்கள் என்றும் - அமைச்சர் மேலும் குறிப் பிட்டாh


தணிக்கை அவர்களே நேற்றைய செய்தியில் அமைச்சர் கூறியதாகத்தான் போட்டிருந்தார்கள். இன்றைய செய்தியில் அதை புலிகள் மறுத்திருப்பதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே இங்கு முரண்பாடு இல்லை. எது உண்மை எது பொய் என்பது ஒரு சிலரிற்குத்தான் தெரியும்.
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 01:45 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 01:47 PM
[No subject] - by Paranee - 11-03-2003, 02:53 PM
[No subject] - by Paranee - 11-03-2003, 02:54 PM
[No subject] - by kuruvikal - 11-03-2003, 05:19 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:45 PM
[No subject] - by சாமி - 11-03-2003, 07:49 PM
[No subject] - by Mathivathanan - 11-03-2003, 08:23 PM
[No subject] - by yarl - 11-03-2003, 08:28 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:08 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:12 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:15 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:19 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:24 PM
[No subject] - by yarl - 11-03-2003, 09:36 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 09:46 PM
[No subject] - by kayanmathi - 11-03-2003, 11:58 PM
[No subject] - by AJeevan - 11-04-2003, 12:49 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 05:20 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 06:23 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 08:19 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 08:22 AM
[No subject] - by தணிக்கை - 11-04-2003, 08:48 AM
[No subject] - by Kanani - 11-04-2003, 09:12 AM
[No subject] - by Paranee - 11-04-2003, 09:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)