09-03-2005, 03:26 PM
தேசவழமைச் சட்டம் மலபார் வழி வந்த இந்திய மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கான பாரம்பரியச் சட்டம்...! இதில் அடிப்படை சொத்துரிமை மற்றும் திருமணத்தின் போதும் பின்னுமான கணவன் - மனைவி உரிமை மற்றும் வழமைகள் என்பன பற்றி சொல்லப்படுகின்ற போதும் விவாகரத்து என்பது ஆங்கிலேய மற்றும் உரோமன் - டச்சுச் சட்ட வழிவந்த பொதுச்சட்டத்தின் கீழேயே தற்போதைய நிலையில் பாவிக்கப்படுகிறது...! தற்போது சொத்துடமை தொடர்பிலேயே தேசவழமை யாழ்ப்பாண வழி வந்த தமிழருக்குப் பாவிக்கப்படுகிறது...! திருமணம் என்பது இலங்கையின் பொதுச்சட்ட அறிமுகத்தின் பின் அதன் கீழ் ஆளப்படுகிறது..! அதன் முன் தேசவழமையின் சில இலகு நடைமுறைக்குள் ஆளப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்துத் தெருவிக்கப்பட்டுள்ளது...!
தகவல் - இலங்கைச் சேர்ந்த சட்டத்தரணி..!
இதன்படி யாழ்ப்பாண ஆணைத் திருமணம் செய்யும் வெளியிடத்துப் பெண் கொள்ளும் உரிமை தொடர்பிலேயே நாம் தெரிந்து கொண்ட வழக்குகள் அமைந்திருக்கின்றன...! தற்போதைய நடைமுறையில் திருமணம் தொடர்பில் யாழ்ப்பாணத் தமிழர்கள்... கண்டிய சிங்களவர்கள் மற்றும் இஸ்லாமியரைத் தவிர்த்து...ஏனைய இலங்கையரைப் போல ஆங்கிலேய, உரேமன் டச்சுச் சட்டம் மூலம் ஆளப்படுவதாகத் தெரிகிறது...!
இது தொடர்பில் எமது சார்ப்பாக எந்தக் கருத்துத் தவறும் இடம்பெற்றிருந்தால் அது சுட்டிக்காட்டப்படலாம்...! திருத்தப்படும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>