Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமர் கொலையும் சந்திரிகா நிலையும். பகுதி 7
#1
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகினது…

சென்ற தொடரில் இந்திய அரசின் உளவு அமைப்பான றோ ஏன் கதிர்காமரைக்கொலைசெய்திருக்கக்கூடாது?, அவ்வாறாயின் எப்படி கொலை செய்திருப்பார்கள், எவரைக்கொண்டு அதை செய்திருப்பார்கள் எனப்பார்த்தோம். இம்முறை பொதுஜன ஐக்கியமுன்னணிக்கட்சியே ஏன் அவரைக்கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்ப்போம்.

சிறீலங்கா அரசியலில் சிங்களம் ஆட்சிசெய்யத்தொடங்கிய காலத்திலிருந்தே உட்கொலைகள் நடந்தவண்ணம் இருக்கின்றது. கட்சிக்குள் ஒருபகுதியினருக்கு வேண்டப்படுபவர் மற்றையவர்களால் கொல்லப்படுவதும், மற்றைய பகுதியினருக்கு வேண்டப்படுபவர் இவர்களால் கொல்லப்படுவதும் காலம்காலமாக நடைபெறும் பொழுதுபோக்காகின்றது சிங்களத்திற்கு. காதிர்காமரையும் அவர்கள் ஏன் கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்ப்போம் இனி?.

சுந்திரிகாவின் அரசு ஆட்சிசெய்யத்தொடங்கிய காலத்தில் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் சந்திரிகாவின் மாமனான அனுரத்த ரத்வத்தையாவார். ஆனால் இப்போ, அவர் சிறையிலுமி வீட்டிலுமாகவிருக்கின்றார். இதற்கெல்லாம் காரணமாக ரத்வத்தையும், அவரின் விசுவாசிகளும் நினைப்பது கதிர்காமரை. ஏனென்றால் சிறிது காலமாக கதிர்காமரின் செல்வாக்கு பொதுஜன ஐக்கிய முன்னணிக்கட்சிக்குள் வளர்ந்து வந்ததை நாம் யாபேரும் அறிவோம். அதற்கு உதாரணமாக சந்திரிகா மீண்டும் தனது கூட்டுக்கட்சிகளின் ஆதரவில் மீண்டும் தனது பதவியை தக்கவைத்த சமயத்தில் ரணிலின் மூன்று அமைச்சர்களை அப்பதவியில் இருந்து விலத்தியதுடன் அதை தன்னகப்படுத்தியபோது அதுவிடயமாக வெளிநாடுகளில் இருந்து வந்த கேள்விகளுக்கெல்லாம் அமைதியாக, அழகான பதில்களை அவர்களுக்கு சொல்லி தம்மிடம் எதுவிதமான பிழையும் இல்லாதவாறு நடந்து, நடித்துக்கொள்ள கதிர்காமர் பெரிதும் உதவினார். அந்தவகையில் அவரின் செல்வாக்கு கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தது. அடுத்து சந்திரிகாவின் முன்னைய ஆட்சியில் பாதுகாப்பமைச்சராகவிருந்த அனுரத்த ரத்வத்தை அப்போ சந்திரிகாவிற்கு அடுத்தநிலையில் இலங்கையில் போற்றப்படட ஒருவர். அவர், புலிகளை இன்றோ? அல்லது நாளையோ? பிடித்துவிடுவோம் என்றும், இன்னும் ஐம்பது புலிகளே மிச்சமாக உயிருடன் இருக்கின்றார்கள் என்றும், கண்டிக்கும் யாழ்ப்பாணத்திற்குமான தரைவழிப்பாதையை ஒருமாதத்தில் ஏற்படுத்த போவதாகவும், யாழ்ப்பாண தமிழ் மக்களை இலங்கையின் சுதந்திரவிழாவில் கலந்துகொள்ள தரைவழியை தம் இராணுவம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளுக்கொரு அறிக்கைகளை பொழுதுக்கொரு வண்ணம் விட்டுக்கொண்டிருப்பார். (அவ்வறிக்கைகள் கோமாளித்தனமானது என்பது வேறுவிடயம்) அந்தவகையில் அவர்கட்சிக்குள் அவர் ஏதாவது ஒருவகையில் பேசப்பட்ட ஒருவராக இருந்தார். அப்போ கதிர்காமரின் பெயர் வெளிநாட்டமைச்சர் என்பதோடு நின்றது. இப்போ போன்று அவர் பெரிதாக சிங்கள மக்களால் பேசப்படவில்லை. சென்ற தேர்தலில் கதிர்காமரை வெளிநாட்டமைச்சராக்க முடிவெடுக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பமைச்சராக பதவி வகித்த அனுரத்த ரத்வத்தையின் பெயரே அங்கு பேசப்பட்டது. ஆனால் மனித உரிமைகள் மீறப்படும் நாட்டில், அதற்கு பங்கம் நடக்கும்வகையில் செயற்பட்ட பாதுகாப்பமைச்சராகவிருந்த அமைச்சரை ஏனைய நாடுகள் ஏற்காது என்கின்ற அடிப்படையில் அது சாத்தியமாகவில்லை. அதன் பின்னரே மீண்டும் கதிர்காமர் அமைச்சரானார். அத்துடன் சிற்றி மிலேனியம் இராணுவ முகாம் ரணில் ஆட்சிக்காலத்தில் உலகின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு அதன் காவலர்கள் மேற்படி சந்திரிகாவின் கட்சியும், அவர்களின் பாதுகாப்பமைச்சராகவிருக்கும் அனுரத்த ரத்வத்தையும் தான் என்பதை நிரூபித்த பின்னர் அனுரத்த ரத்வத்தையின் செல்வாக்கு கட்சிக்குள்ளும், சிங்கள மக்களிற்குள்ளும் சரியத்தொடங்கியதுடன் கதிர்காமரின் பெயர் அப்பதவிக்காக மீண்டும் தெரிவானது. அத்துடன் சிற்றி மிலேனியம் முகாம் பற்றிய திடுக்கிடும் விதமான சம்பவங்கள் வெளிச்சமாகிய பின் பல வினாக்கள் எமக்கு எழுகின்றது. அதுவிடயம் வரும் தொடரில் பார்ப்போம். சிற்றி மிலேனியம் முகாம் பற்றிய தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டபோதிலும் எவ்வாறு அது வெளிச்சத்திற்கு வந்தது என்பது எமக்கு புரியாத புதிராகவிருந்தாலும், அந்தவிடயம் தெரிந்த தமிழராக கதிர்காமர் இருந்திருப்பார். சிலவேளைகளில் அவ்விடயத்தை கதிர்காமரே மற்றைய கட்சிக்கு சொல்லியிருக்கலாம் என எண்ணியும் அனுரத்த ரத்வத்தையும், அவரின் விசுவாசிகளும் கதிர்காமரை சுட்டிருக்கலாம். அதற்கான ஆயுதம் எப்படி அவர்களுக்கு கிடைத்திருக்கும்?. அடுத்த தொடரில் அவை.

தொடரும்.

மலரினி மலரவன்.
www.tamilkural.com

Reply


Messages In This Thread
கதிர்காமர் கொலையும் சந்திரிகா நிலையும். பகுதி 7 - by malaravan - 09-03-2005, 12:18 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)