Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலையக மக்கள் முன்னணியை உடைத்த மகிந்த ராஜபக்ச
#1
மலையக மக்கள் முன்னணியை உடைத்த மகிந்த ராஜபக்ச!
[சனிக்கிழமை, 3 செப்ரெம்பர் 2005, 17:11 ஈழம்] [ம.சேரமான்]
மலையக மக்கள் முன்னணியை உடைப்பதில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச காட்டிய அக்கறை கைகூடப் போகிறது.


தமிழ்த் தேசியத்துக்கு முழு ஆதரவளித்து நின்ற மலையக மக்கள் முன்னணியை எதிர்வரும் அரசுத் தலைவர் தேர்தலையொட்டி மகிந்த ராஜபக்ச உடைத்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.அருள்சாமி மற்றும் டி. திகம்பரம் ஆகியோர் தலைமையிலான ஒரு குழுவினர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இது குறித்து தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது,

சிறிலங்கா அரசுத் தலைவர் தலைவர் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி இதுவரை எவ்வித முடிவும் மேற்கொள்ளவில்லை. தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் முடிவுகள் கட்சியின் முடிவாகாது. அடுத்த வாரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே யாரை ஆதரிப்பது என்று இறுதி முடிவு செய்யப்படும்.

கட்சி விரோத முடிவுகளை மேற்கொள்வோர் மீது நாடு திரும்பியதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

இருப்பினும் எஸ். அருள்சாமி மற்றும் திகம்பரம் ஆகியோர் கட்சித் தலைமை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாலும் நாங்கள் மகிந்த ராஜபக்சவைத்தான் நாங்கள் ஆதரிப்போம் என்று உறுதியாக அறிவித்துள்ளனர்.

கட்சித் தலைமை தங்கள் மீது மேற்கொள்ளும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையையும் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அருள்சாமி கூறினார்.

இதனால் மலையக மக்கள் முன்னணி உடையக் கூடும் என்று தெரிகிறது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
மலையக மக்கள் முன்னணியை உடைத்த மகிந்த ராஜபக்ச - by வினித் - 09-03-2005, 11:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)