09-03-2005, 05:43 AM
சூறாவளி: அமெரிக்க நகர அகதிகள் முகாமில் அராஜகம்
நியூயார்க், செப். 3: அமெரிக்காவின் நியூ ஆர்லியான்ஸ் நகரில் கேதரீனா என்ற சூறாவளி அடித்து ஓய்ந்து 4 நாள்களாகியும் மீட்பு, உதவிப்பணிகள் முழு வீச்சு பெறவில்லை; அந் நகர விளையாட்டு மைதானத்தில் அகதிகளாகக் குவிந்த 20 ஆயிரம் பேர் சுகாதாரமற்ற நிலையில் பசியாலும், களைப்பாலும் வாடுகின்றனர்.
பகலில் உணவு, குடிநீர் இல்லாமல் வெயிலில் வாடுகின்றனர். இரவில் இருட்டில் சமூக விரோதிகளின் கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களால் பாதுகாப்பு இல்லாமல் அவதியுறுகின்றனர். பகலில் ஏ.சி. அறைகளிலும் இரவில் மின்சார வெளிச்சத்தில் வெதுவெதுப்பான அறைகளிலும் இருந்து பழக்கப்பட்ட மக்களுக்கு விளையாட்டு மைதானத்தில் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
பசி, தாகம், அரசிடமிருந்து தக்க நேரத்தில் உதவி கிடைக்காததால் விரக்தி போன்றவற்றால் உடலும் உள்ளமும் தளர்ந்த நிலையிலேயே பலரும் இருக்கின்றனர். இந் நிலையில் சமூக விரோதிகளின் இரக்கமற்ற கொடூரச் செயல்கள் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மைதானத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வரும் ஹெலிகாப்டர்களை நோக்கி சமூகவிரோதிகள் சுடுகின்றனர். சாலை வழியாகவும் வர அனுமதிப்பதில்லை.
சின்னஞ்சிறுமிகளைக்கூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்குகின்றனர். தடுக்க வரும் ஆண்களை கூட்டமாகச் சேர்ந்து கத்தியாலும் தடிகளாலும் அடித்து அச்சுறுத்துகின்றனர். இதைப்போன்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவை என் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று நகர மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் தெரிவித்தார். நகரில் சமூகவிரோதிகளின் செயலை ஒடுக்க உடனடியாக 40 ஆயிரம் போலீஸôர் தேவை என்று அவசரச் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.
சுட்டுத்தள்ள 300 பேர் படை: அர்கன்சாஸ் தேசிய பாதுகாப்புப்படையிலிருந்து 300 பேர் எம்-16 ரக நவீன துப்பாக்கிகளுடன் நியூ ஆர்லியான்ஸýக்கு அனுப்பப்பட்டிருப்பதாக, லூசியானா மாநில கவர்னர் கேதலின் பிளாங்கோ தெரிவித்தார். இராக்கில் பணிமுடித்து சமீபத்தில் நாடு திரும்பியுள்ள இவர்கள் சமூக விரோதிகளை தயவு தாட்சண்யம் பாராமல் ஒடுக்கிவிடுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தன்னார்வ நிறுவனங்கள்: அமெரிக்காவின் பிற பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனங்களும் நியூ ஆர்லியான்ஸ் நகரில் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கின்றனர். விளையாட்டு மைதானம் வதைக்கூடமாக மாறிவிட்டதால் ஏராளமானோர் அங்கிருந்து தங்களுடைய வீடுகளுக்கே திரும்புகின்றனர், அல்லது நண்பர்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
அரசாங்கமே விளையாட்டு மைதானத்தில் இருப்பவர்களை வெளியூர்களுக்கு அனுப்புவதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. வேறு இடங்களுக்குக் கூட்டிச்செல்ல வரும் ஏர்-கண்டிஷன் பஸ்களின் எண்ணிக்கை போதவில்லை. மைதானத்தில் திரண்டுள்ள மக்கள் இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் பொறுமையாக வரிசைகளில் நின்று உதவிகளை ஏற்கின்றனர். தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆறுதல் தரும் வகையில் செயல்படுகின்றனர். கடைசியில் உள்ளவர்கள் கூட தங்களுடைய கைக்குழுந்தைகளையும் சிறுவர், சிறுமிகளையும் வரிசையின் முன்பகுதிக்குக் கொடுத்தனுப்பி தண்ணீர் குடிக்க வைக்கின்றனர்.
பிற நாடுகள் உதவி: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்த போதிலும் இப்படிப்பட்ட நேரத்தில் அதற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயார் என்று ரஷியா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், நேட்டோ, சீனா, தென் கொரியா, ஹோண்டுராஸ், வெனிசூலா, கொலம்பியா, மெக்சிகோ, எல் சால்வடார், ஜமைக்கா ஆகியவை அறிவித்துள்ளன. ரஷியா அளித்த உதவிகளை ஏற்க அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாக ரஷியப்பிரதிநிதி ஒருவர் வருத்தம் தெரிவித்தார்.
புயலால் வீடிழந்தவர்கள் தாற்காலிகமாகத் தங்க கூடாரங்கள், உணவு, குடிநீர், மருந்து, பிஸ்கெட்டுகள், பாதுகாப்பான குடிநீர், உடைகள், வெள்ள நீரை வெளியேற்ற ஜெனரேட்டர்கள், காலணிகள், சேறு-சகதியை அப்புறப்படுத்த துப்புரவுக் கருவிகள், புல்டோசர்கள், டிராக்டர்கள், தகவல் தொடர்புச் சாதனங்கள், பூச்சி மருந்து தெளிப்பான்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை அளிக்க பல்வேறு நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்துடன் மீட்பு, உதவிப் பணியில் ஈடுபட மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களையும் ராணுவத்தினரையும் தயார் நிலையில் வைத்துள்ளன.
புஷ் அழைப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் திரட்டுமாறு தன்னுடைய தகப்பனாரும் முன்னாள் அதிபருமான மூத்த ஜார்ஜ் புஷ்ஷையும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனையும் கோரியிருக்கிறார் இப்போதைய அதிபர் புஷ்.
Dinamani

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>