09-02-2005, 11:43 PM
நியூஓர்லின்ஸ் நகரின் நிலைமை மிகவும் பரிதாபம்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40756000/jpg/_40756480_fire_ap203i.jpg' border='0' alt='user posted image'>
<b>நியூஓர்லின்ஸில் வெடி விபத்தும், தீயும்</b>
அமெரிக்காவின் நியூஓர்லின்ஸ் நகரில் சூறாவளியால் பாதிப்புகளுக்கான மீட்புப் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் மற்றும் தீயை அடுத்து நகரெங்கும் புகை மண்டலம் பரவியுள்ளது.
கொள்ளைகளையும், வன்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்காக அங்கு படையினர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிப்புகளால் அங்கு ஸ்தம்பித நிலை உருவாகியுள்ளது.
பெரும்பாலும் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில், துர்நாற்றம் பிடித்த வெள்ள நீரில், அழுகிய சடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் பலர் மீட்கப்படுவதற்காக காத்திருப்பதாகவும், ஆனால் அந்த நடைமுறைகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், குழந்தைகள் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனைகளில் மின்சாரம் கிடையாது. மிகவும் மோசமாக சுகயீனமுற்ற நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தப்பியவர்களும், அதிகாரிகளும் மீட்புப் பணி குறித்து வருத்தத்துடன் புகார் செய்கிறார்கள்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களைப் பார்வையிட அதிபர் புஷ் சென்றிருக்கிறார்.
இதுவரையிலான மீட்புப் பணிகள் ஏற்கப்பட முடியாதை என்றும், ஆனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவிகள் விரைந்து கொண்டிருப்பதாகவும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் செய்யப்படும் என்றும் அங்கு புறப்படுவதற்கு முன்னதாக அவர் கூறியுள்ளார்.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>