09-02-2005, 10:35 PM
tamilini Wrote:பெம்பளையிலின்ரை உந்த நிலைக்கு ஆம்பிளையள் இல்லை காரணம் .உப்பிடியான உந்த அம்மம்மாக்களும் ஆச்சிமாரும் தான் காரணம்.... <!--emo&Quote:இலங்கையுல் விவாகரத்து குறைவுக்கு புரிந்துணர்வு அதிகக் என்பதை விட சமுக கட்டுப்பாடும் பெண்கள் தமது சொந்த காலில் நிற்க முடியாத நிலைமையுமே காரணம் என்று நினைக்கின்றேன். விவாகரத்து என்பது சமுகத்தில் ஒரு அங்கீகாரமில்லாத அதனை சட்டரீதியாக இலகுவாக பெறமுடியாத ஒன்றாக இருப்பதால் பலர் அது பற்றி சிந்திப்பதில்லை, அது தவிர சேர்ந்து வாழமுடியாமல் வேதனையில் துவளும் பல பெண்கள் அதுபற்றி ஒரு கணம் சிந்தித்தாலும் அதற்கு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க கூடிய தன்மையும் பொருளாதார பின்புலமும் இல்லாமையால் மேற்கொண்டு விவாகரத்து பற்றி சிந்திப்பதில்லை,மதன் சொந்தக்காலில் நிற்றல் என்று எதைச்சொல்றீங்க. சுயசம்பாத்தியமா? ஆண்களைப்போல நமது பெண்கள் விவசாயம் செய்கிறார்கள். விவசாய
_________________
வேலைகளிற்கு செல்கிறார்கள். குடிசைக்கைத்தொழில் அது இது என்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அண்மையில் தமிழீழ தேசியத்தொலைக்காட்சியில்
காட்டினார்கள் குடும்பத்தலைவர்கள் வீட்டுச்சாமன்களைக்கூட விற்றுக்குடிக்கிறார்கள் என்று. இத்தனைக்கும் பெண்கள் தான் உழைச்சு அவர்களிற்கும் சாப்பாடு போடுறார்கள். பல சமயங்களில்
குடிக்கவும் காசு கொடுக்கிறார்கள். இதை விட தமிழீலத்தில் விதவைகள் வாழ்ந்ததில்லையா தனியாக தங்கள் சுயசம்பாத்தியத்தில்? பலர் கணவன்மாரில் தங்கியிருக்கிறவர்கள்
இல்லை என்றில்லை இருக்கிறார்கள். ஆனால் அவர்களாலும் இப்படி செய்ய முடியாதா என்ன? நம்மட ஊர்களில விவாகாரத்திக்குறைவுக்கு காரணம்
அன்பு பாசம் தான் அதிகமாக இருக்கலாம். கணவனுடன் சண்டை போட்டு தாய் வீடு வாற பெண்கள். என்ன தான் தாய் தகப்பனவை போகவேணாம் என்றாலுமம்
புருசன் வந்து கூப்பிட சந்தோசமாக போறவை தான் அதிகம் இதை கண்கூடு கண்டிருக்கம். நம்மூர்களிலும் கணவன் மாரை பிரிஞ்சு வாழுற பெண்களும் இருக்காங்க இதில மறுமணம் செய்யிறவங்க குறைவு.
அவங்களில் சிலர் ஒரு சில சமூகப்பிரச்சனைகளையும் எதிர் கொள்றாங்க அவர்களது நடவடிக்கைகளால்.
அதெப்படி ஒருவரது அல்லது ஒருத்தியின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று பிரிஞ்சிட்டு. இன்னொருதரை அல்லது இன்னொருத்தியை மறுமணம் செய்திட்டு ஒருவேளை அவரது அல்லது அவாவின் நடவடிக்கைகள் பிடிக்கல என்று மனமுறிவு வந்தா
அவரையும் பிரியிறதா?? பிறகு இன்னொருதர். இதால பாதிக்கப்போறது என்னவோ இருவருக்கும் பிறந்த பிள்ளைகள்.
ஆனா இன்றைய சமூகத்தில் அதிகமான இடங்களில பிரிவிற்கு காரணம் ஈகோவாக இருக்கலாம். சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம்.
ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சிருந்தா சில சில பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ளலாம். சக உறவு இருவரும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ் முனையக்கூடாதா?? தம்பதியினருக்கு அது அவசியம் தானே.
ஒரு வேளை இதுவே வேறைமாதிரியான காரணங்கள் என்றால் இன்னொருதருடன் தொடர்பு
அப்படி இப்படியான காரணங்கள் என்றால் பிரிந்து போறதில தவறில்லைத்தானே
எடுத்த உடனை விவாகரத்து எடுத்திட்டு பிரிஞ்சுவிட்டு பிறகு நினைத்து வருந்திறவங்க இல்லாமல் இருப்பாங்களா?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

