Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோயில்கள் இங்கே....
#1
அத்தனை குலதெய்வங்களுக்கும்
மொத்தமாய் இந்தப்
பெருநகரமெங்கும்
பெருகி வரும் கோயில்கள்!

கோயிலும் மனத்துள்ளே
குளங்களும் மனத்துள்ளே எனும்
சித்தர் தத்துவமெல்லாம்
செத்த தத்துவமாயிற்று

ஈழ மக்கள் நமக்கெல்லாம்
பகுத்தறிவும் பட்டறிவும்
பட்டழிந்து போயிற்று
காலம் மாறியும நம்
கோலம் மாறவில்லை

கருணை நிதி கேட்டால்
கைவிரிக்கும் நம் மக்கள்
கோயில் நிதிக்கென்றால்
கொட்டிக் கொடுக்கின்றார்.

கோயில்கள் இங்கே
வரவைப் பெருக்கும்
வளமான ஊற்றுக்கள்
வரிவிலக்குப் பெற்ற
வணிக நிலையங்கள்!

படைத்தவனுக்கே படியளக்கும்
பண்டக சாலைகள்
படித்தவரையும் பாமரனாக்கும்
பரிணாமப் பட்டறைகள்1

அர்த்தமற்ற சடங்குகள்
அரங்கேறும் மண்டபங்கள்!
வரையறையே இல்லாத
விரயத்தின் கொள்ளிடங்கள்!

மூட நம்பிக்கைகளின்
நாற்று மேடைகள்!
கோயில்கள் இப்படியே
பிற்போக்கின் பிறப்பிடமாய்
எப்படித்தானிருந்தாலும்

கோயிலிருக்குமிடத்தில்தான்
குடியிருப்போம் என்கிற
கொள்கைப் பிடிப்பில் மக்கள்
குரங்காய் இருப்பதனால்

கோயில்களின் கொள்கைகளில்
குறி வைத்துப் போராடும்
மறுமலர்ச்சி விழைகின்ற
மக்கள் அணிதோன்றவேண்டும்!

மெய்ஞானத்தை நெய்யும்
விஞ்ஞானத் தறிகளாக
வறுமை வடுக்களை
வருடும் விரல்களாக
மனித அவலங்கட்கு
மருந்திடும் மனைகளாக
குடிசைக்கு நிழல் தரக்
குனியும் கோபுரங்களாக
கோயில்களை மாற்றக்
குறிவைத்துப் போராடும்
மறுமலர்ச்சி விழைகின்ற
மக்கள் அணிதோன்றவேண்டும்!

நெடுந்தீவு எஸ். சண்முகராஜா

நன்றி: முழக்கம்
[i][b]
!
Reply


Messages In This Thread
கோயில்கள் இங்கே.... - by சாமி - 11-03-2003, 08:47 PM
[No subject] - by aathipan - 11-04-2003, 05:51 AM
[No subject] - by sOliyAn - 11-04-2003, 02:27 PM
[No subject] - by Paranee - 11-04-2003, 02:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)