09-02-2005, 07:30 PM
இங்கு நடைபெறும் விவாதத்தில் பங்கு கொள்ள நேரம் இன்மையால் முடியவில்லை. எனினும் தாணுவின் வலைப்பதிவில் இருந்து ஒரு கவிதையை உருவிப் போட்டுள்ளேன், உங்களுக்காக.
[size=16]<b>ஆண்களில்லாத உலகத்திலே</b>
பெண்களுக்கே வக்காலாத்து வாங்கி
ஆண்களைச் சாடிக்கொண்டிருப்பதால்
ஆண்களுக்கு எதிரியல்ல நான்
ஆணாதிக்கத்துக்கு மட்டுமே எதிரி
அன்பான அப்பா சொல்லித் தந்தது
அறிவோடு தன்னம்பிக்கை வேண்டுமென்று
அனுசரணையான அண்ணன் கற்பித்தது
அடுக்களையோடு அடங்கி விடாதேயென்று!
பால்ய நண்பன் பகிர்ந்து கொண்டது
பாலியல் பேதம் நட்பிற்கில்லையென்று
பருவத்தே வந்த நண்பர் கலந்தது
பசுமையான இல்லறத்தில்.
இடையிடையே எத்தனை நண்பர்கள்
இன்னலுற்ற போழ்திலெல்லாம்
இருகரம் நீட்டி துயர் அகற்றி
இன்றும் நல்லதுணையாயிருப்பவர்கள்
இத்தனை இதயங்களையும் மறந்து
இகழ்மொழி பேசுவேனோ இதயமின்றி!
ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!
[size=16]<b>ஆண்களில்லாத உலகத்திலே</b>
பெண்களுக்கே வக்காலாத்து வாங்கி
ஆண்களைச் சாடிக்கொண்டிருப்பதால்
ஆண்களுக்கு எதிரியல்ல நான்
ஆணாதிக்கத்துக்கு மட்டுமே எதிரி
அன்பான அப்பா சொல்லித் தந்தது
அறிவோடு தன்னம்பிக்கை வேண்டுமென்று
அனுசரணையான அண்ணன் கற்பித்தது
அடுக்களையோடு அடங்கி விடாதேயென்று!
பால்ய நண்பன் பகிர்ந்து கொண்டது
பாலியல் பேதம் நட்பிற்கில்லையென்று
பருவத்தே வந்த நண்பர் கலந்தது
பசுமையான இல்லறத்தில்.
இடையிடையே எத்தனை நண்பர்கள்
இன்னலுற்ற போழ்திலெல்லாம்
இருகரம் நீட்டி துயர் அகற்றி
இன்றும் நல்லதுணையாயிருப்பவர்கள்
இத்தனை இதயங்களையும் மறந்து
இகழ்மொழி பேசுவேனோ இதயமின்றி!
ஆணாதிக்கம் மறந்தவர்கள் மட்டுமே
ஆண்கள்.................என்மொழியில்!
<b> . .</b>

