11-03-2003, 07:39 PM
இதுதான் அவா தர முயன்றது.
கிளிநொச்சி ஏ9 வீதியில் பயணம் செய்த வீதி அதிகாரசபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் இருந்து ரி56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கிளிநொச்சியிலுள்ள தமிழீழ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி கைப்பற்றப்பட்டதையடுத்து வாகனத்தில் பயணம் செய்த மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழீழ காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டபோது தப்பியோடிவிட்டார்.
தப்பி ஓடிய நபரையும் மற்றொரு சந்தேக நபரையுமே கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏ9 வீதியால் பயணம் செய்த வீதி அதிகாரசபைக்குச் சொந்தமான "டிப்பர்' வாகனம் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தமிழீழ காவல் துறையினர் சோதனையிட்டபோது சாரதியின் இருக்கையின் கீழ் பகுதியில் வெள்ளை நிற உரப்பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி56ரக துப்பாக்கி மீட்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வாகனத்தில் பயணம் செய்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மாத்தறையைச் சேர்ந்த சனத்தசேவத்த சயித் கேமந்த, தங்காலையைச் சேர்ந்த உடுமலகெவ கனத்தகே தியல், குமரபுரம் பரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகநாதன் சுதா ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட மூவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் 3 ஆம் சந்தேக நபரான சுதா தப்பி ஓடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தியதில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பூநகரி பரந்தன் வீதியில் வைத்து நான்காவது சந்தேக நபரிடம் கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
1 ஆம் 2 ஆம் சந்தேகநபர்கள், 3 ஆம் சந்தேக நபரையும் அழைத்துச் சென்று பூநகரி பரந்தன் வீதியில் காட்டுக்குள் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த 4 ஆவது சந்தேக நபரிடம் துப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணைக்குட்படுத்தப்பட்ட இரு சந்தேக நபர்களும் கிளிநொச்சி தமிழீழ மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறையினரால் முன்னிறுத்தப்பட்டதையடுத்து இருவரையும் இம் மாதம் 21 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் 3 ஆம், 4 ஆம் சந்தேகநபர்களை கைது செய்யுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.