09-02-2005, 12:36 PM
குருவியாரே ஒருவர் மது அருந்துவதற்கும் அதனால் நிகழக் கூடிய குற்றவியல் சம்பவங்களுக்கும், மண ஒப்பந்த ,மீறலினால் எற்படும் ஒப்பந்த முறிவு எனும் விவாகரத்திற்கும் சம்பந்தமென்ன.பிருத்தானியாவில் மதுப் பழக்கம் எல்லை மீறிச் செல்வது விவாகரத்தான பெண்களினால் என்கின்ற உங்கள் கண்டு பிடிப்பு விகாரமானது.
எனது நினைவில் உள்ள வரை இங்கு மதுப் பழக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் ,இளயவர்களுக்கு மதுபானச் சாலைகளில் வழங்கப் படும் இலவச மது பானங்களே.இவை ஒன்று, இரன்டு இலவச மதுபானங்களைக் குடுத்து அவர்களை வெறி கொள்ளச் செய்து மொடாக் குடியராக்கி,மேலும் மேலும் குடிவகைகளை அவர்கள் வாங்குவதற்கான வியாபாரத் தந்திரம் என்றே கூறுகிறது.
உங்கள் கருத்தாடல்களும் சிந்தனையும் எவ்வாறு சம்பந்தா சம்பந்தமிலாத விடயங்களை சம்பந்தப் படுத்தி,உங்களின் பழமை வாத சிந்தனைகளை நியாயப் படுத்துபனவாக இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள கருத்து சான்றாகிறது.