09-02-2005, 09:42 AM
இங்கு வந்த பலரதும் கருத்துக்களில் பெண்கள் சொந்தக்காலில் இல்லாத படியால்தான் விவாகரத்துப் பெறத் தயங்குகின்றனர் என்று சொல்லப்படுகிறது...! அப்படியாயின் சொந்தக்காலில் நின்றால் விவாகரத்து வாங்கலாம் என்பதா உங்கள் வாதம்...! அப்படி விவாகரத்து வாங்கனும் என்றால் பிறகேன் சொந்தக்காலில் நிற்பவர்களுக்கு விவாகம்..! இந்த சொந்தக்கால் என்ற விவகாரமே பல சந்தர்ப்பங்களில் ஈகோவுக்கும் சுயநலத்துக்கும் தற்பெருமைக்கும் புரிந்துணர்வின்மைக்கும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்பதையும் கவனிக்கத்தவறாதீர்கள்..! மேற்குலகம் அதைத்தான் எதிர்கொண்டிருக்கிறது..! சொந்தக்கால் என்பதன் அர்த்தம் தவறாக கற்பிக்கப்படுவது அபாயகரமானதும் கூட...!
உதாரணத்துக்கு எங்களோடு ஒருவர் ஆண்டு 7 இல் படித்தவர்...! பெற்றோர் இங்கிலாந்தில் வசிக்க அவர் உறவினர்களோடு தங்கிப் படித்தவர்..! அவர் பெற்றோரிடம் பணம் பெற்று பாடசாலை வங்கியில் பணம் வைத்திருந்தார்...அதாவது உங்கள் பாசையில் சொந்தக்காலில் நின்றார்...! அவர் அந்தப் பணத்தை வைத்து உறவினருக்குத் தெரியாமல் பாடசாலைக்கு வெளியே புகைப்பிடிப்பது ஊர் சுத்திறது கூல் பாரில் காலம் கழிக்கிறது இப்படி டாம்பீகமாக வாழ்ந்து இறுதியில் பரீட்சைகள் எழுத சக மாணவர்களுக்கு காசு கொடுத்து காட்டச் சொல்லி வற்புறுத்தவும் வெளிக்கிட்டார்...!
சொந்தக்காலில் நிற்பது தனி மனிதருக்கு எவ்வளவு அவசியமோ...அந்த நிலையில் இருப்பவர்களுக்கு உள்ள சமூக குடும்பப் பொறுப்புக்கள் என்ன என்பதை தெளிவாக பொறுமையோடு உணரும் பக்குவமும் மற்றவர்களை புரிந்துகொண்டு அனுசரித்துப் போகவும் தெரிந்திருக்க வேண்டும்...! இன்று பெண்கள் பலருக்குள் ஒரு சிந்தனை தன்னிடம் வேலை காசு வசதி இருந்தால் தான் எப்படியும் வாழலாம் எவருடனும் போகலாம் எவருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்று...ஊதாரிகளாக... சமூகச் சிந்தனை அற்றவர்களாக...சமூகவிரோதிகளாக தாந்தோன்றித்தனமாக வாழ விளைகின்றனர்...! இதுவல்ல சொந்தக்காலில் நிற்பதால் எதிர்பார்க்கப்படுவது...! சொந்தக்கால் கருத்தை வைப்பவர்கள் இவற்றையும் கவனித்து அதன் கருத்தாழத்தை புரிந்து கருத்துக்கள் வைத்தல் சிறப்பான எதிர்காலத்துக்கு உதவி புரியும் என்று எண்ணுகின்றோம்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>