09-02-2005, 09:06 AM
kuruvikal Wrote:Mathana Wrote:இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.
இலங்கையில் தமிழர் இருக்கினம் என்றது உண்மை...அதலாததான் விவாகரத்துக் குறைவு என்பதிலும்...இலங்கையில் உள்ள சமூகக்கட்டமைப்பே பெரிதும் காரணம்...! மேற்கில் பெண்கள் ஆண்கள் சிறிய கருத்து வேறுபாட்டைக் கூட புரிஞ்சுக்க அவகாசம் அளிப்பதில்லை..! ஈழத்தில் இப்போ ஆண்கள் பெண்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்...அத்தோடு சமூகக்கட்டமைப்போடு ஒன்றித்து புரிந்துணர்வோடு வாழவும் முனைகின்றனர்...! மேற்கில் நீடித்த குடும்ப வாழ்வியலுக்குள் கட்டுண்டு வாழ அநேகருக்குப் பொறுமையும் வாழ்வியல் தெளிவும் இல்லை...! பலர் சுயகாலில் நிக்கிறம் என்று ஊதாரிகளாக வாழவே விளைகின்றனர்...! எதுக்கும் ஒரு எல்லை கட்டுப்பாடு அவசியம்...இல்லாதவர்கள்...நாளுக்கு ஒரு திருமணம் முடிப்பதும் இல்ல சுதந்திரம் என்ற தப்பான அபிப்பிராயத்துடன் தவறான வழியில் சிந்திக்க முயலுதலும் தவிர்க்க முடியாதுதான்...! :wink:
இலங்கையுல் விவாகரத்து குறைவுக்கு புரிந்துணர்வு அதிகக் என்பதை விட சமுக கட்டுப்பாடும் பெண்கள் தமது சொந்த காலில் நிற்க முடியாத நிலைமையுமே காரணம் என்று நினைக்கின்றேன். விவாகரத்து என்பது சமுகத்தில் ஒரு அங்கீகாரமில்லாத அதனை சட்டரீதியாக இலகுவாக பெறமுடியாத ஒன்றாக இருப்பதால் பலர் அது பற்றி சிந்திப்பதில்லை, அது தவிர சேர்ந்து வாழமுடியாமல் வேதனையில் துவளும் பல பெண்கள் அதுபற்றி ஒரு கணம் சிந்தித்தாலும் அதற்கு அவர்களுக்கு சொந்த காலில் நிற்க கூடிய தன்மையும் பொருளாதார பின்புலமும் இல்லாமையால் மேற்கொண்டு விவாகரத்து பற்றி சிந்திப்பதில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


