11-03-2003, 12:49 PM
உங்கள் தவறான வாதத்திற்கு மற்றவர்களையும் துணைக்கழைப்பது ஒருவித கோழைகளின் செயல்.அந்நியன் அள்ளிக் கொடுத்தது பரிதாபத்தினால் அல்ல. அது அவனது சுயநலம். அத்துடன் அவன் மனச்சாட்சியின் அழுத்தம். சிங்கள தேசத்திற்கு பயங்கர ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் போது அந்தப் பரிதாபம் எங்கே போனது. அந்தப் பரிதாபம். கோவில் கோவிலாக பள்ளிக்கூடம் வைத்தியசாலை என்று இவர்கள் கொடுத்த ஆயுதத்தைக் கொண்டு அரசு அழித்தொழிக்கும் போது இவர்கள் பரிதாபப் பட்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தார்களா? மனிததர்மத்திற்கப்பால் மக்களின் சாதாரண உரிமைகளுக்கே தடை போட்டு உணவுத தடை, மருந்துத் தடை என்று தமிழனை தமது காலடியில் விழ ஆக்கிரமிப்பாளல் முயன்ற போது எங்கே போனது இந்த அந்நியநாடுகளின் பரிதாபம். யாரிடம் கதை விடுகின்றீர்கள். இராணுவ உதவி ஆயுதத்தளபாட உதவி செய்தது பரிதாபப்பட்டுத்தானோ?சன நாய் அகத்தில் உயர்ந்து நிற்கும் நாடுகள் எல்லாம் இரசாயண ஆயுதங்கள் கொடுத்தது, அங்கு கஸ்டப்படும் மக்கள் ஒரேயடியாகச் கஸ்டப்படாமல் சாகட்டும் என்ற பரிதாப உணர்வின் ஊந்துதலாலா? உங்களுக்குத் தஞ்சம் கொடுததான் என்பதனால் அவர்கள் செய்யும் அனைத்தயும் தலைமேல் தூக்கி வைத்தாடாதீhகள். புலம் பெயர்ந்தவர்களைக் கூட தமது தொழில் வாய்ப்புகளை கூட்டும் ஒரு தந்திரத்திற்காவும், அங்குள்ளவர்களுக்கு தொழில் கொடுத்தால் அதிக வேதனம் அதிக சலுகைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும் தான் உங்களை அங்கு வைத்திருக்கின்றார்கள். தமது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கும் கூட. ஒரு சில நாடுகளைத தவிர மற்றவை எல்லாம் அகதிளைப் பராமரிப்பதற்கு இதுவே முதல் காரணம். அத்துடன் பேரின வாதிகள் கூட அவர்களின் நலத்திற்காகத் தான் உங்களுக்கு அங்கே இருக்க இடம் கொடுத்துள்ளார்கள். அதையும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் செஞ்சோற்றுக் கடனுக்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிங்கள். ஏதாவது ஒரு அரசு வந்து அகதிகளை எல்லாம் துரத்து என்று சொல்லும் வரை. துரோகிகள் என்று நான் எழுதியது உங்களைப் போன்று மற்றவனின் கூலிக்காக கூக்குரலிடும் ஓநாய்களைத் தான். தனது மண் தனது இனம் என்ற எண்ணம் இல்லாமல் சுயநலமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் சிலருக்குத் தான். நித்திரைக்குப் போகும் போதென்ன எந்நேரமும் என் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இப்டியானவர்களுக்கும் சேர்த்தா இந்தப் போராட்டம் என்று. ஆக்கிரமிப்பாளருக்கும் உலக பயங்கரவாதிகளுக்கும் பக்கப்பாட்டுப் பாடும் உங்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது நான் எழுதியவை எப்படி நியாயமாக உங்களுக்குத் தோன்றும். நிச்சயமாய் பங்கபர்காரனின் பழக்கம் உங்களிடம் இருந்தால்
மண்ணிற்குத துரோம் செய்திருக்கமாட்டிர்கள். அப்படியானவைகளை எழுதியிருக்கவும் மாட்டிர்கள்.
அன்புடன்
சீலன்
மண்ணிற்குத துரோம் செய்திருக்கமாட்டிர்கள். அப்படியானவைகளை எழுதியிருக்கவும் மாட்டிர்கள்.
அன்புடன்
சீலன்
seelan

