09-02-2005, 07:16 AM
narathar Wrote:விவாகாரத்தை ஏன் பெரிய விவகாரமாப் பாக்கிறியள்.
மேற்குலகில் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவது என்பது சாதாரண விடயம்.அவர் விவாகரத்துப் பெறும் போது 50% வீதமான சொத்தும்,இன்னும் 5 வருடங்கள் கணவர் சம்பாதிக்கக் கூடிய தொகையும்,வேறு பிள்ளைகளைப் பராமரிப் பதற்கான் செலவையும் கொட்டுக்க வேணும்.எனக்குத் தெரின்ச்ச பல வெளினாட்டவர் இதனால் ஆன்டி ஆனவரும் உண்டு.இப்படிக் கிடச்சதை வச்சு வெகு ஆடம்பரமாக செலவு செய்து வாழும் பெண்களும் உண்டு.சில வேளை இப்படி இருப்பதற்காகத் தான் விவாகரத்து செய்தார்களோ என்று எண்ணத் தோன்றும்.எமது நாட்டில் விவாகரத்துச் செய்வது என்பது ஒரு கெட்ட விசயமாகப் பார்க்கப் பட்டதாலும்,அதன் பின் மறுமணம் செய்வது பெண்களைப் பொறுத்தவரை முடியாத காரியமாகவம் இருந்தது.இது தற்போது மாறி வரலாம்.
என்னைப் பொறுத்தவரை இதனால் பாதிக்கப் படுவது பிள்ளைகளே.ஆனால் பிடிக்காத ஒருவருடன் வெறும் சமுதாய நற் பெயருக்காக பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட விவாகாரத்துப் பெறுவது நலம்.ஆனால் அதைப் பெறுவதற்கான நடைமுறைகளில் குழந்தைகளின் நலனும் முன் நிறுத்தப் பட வேணும்.
நாரதர் கருத்துடன் ஒத்து போகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

