09-01-2005, 01:40 PM
இந்த திறந்த பொருளாதரத்தை இந்தியா இலங்கை நாடுகள் முழுமையாக கடைப்பிடிக்க தொடங்கியபின் நுகர்வு கலாச்சரம் அதிகரித்துள்ளது பண்டங்களை விற்பதற்க்கு பலவித கூத்துக்களை செய்கின்றனர் இந்த மேற்க்கத்தைய முகவர்கள் .இவர்களின் நடுவில் சிக்கி தவிக்கின்றனர் திருமணம் செய்த ஆணும் பெண்ணும்.... பழைய விவாக விதிகளுக்கு அமைய வாழ்வது முடியாமல் போகிறது .விவாகம் என்ற அமைப்பை ஸ்ரோங் ஆக்குவதற்க்குத்தான் விவாகரத்து சட்டம் உருவாக்கப்பட்டத்தென்று நினைக்கிறேன்.முன்பு 7 வருடங்கள் பிரிந்து இருந்து காட்டித்தான் விவாகரத்து பெறலாம். குளோபல் பொருளாத்திரத்தினால் உலகம் கிராமமாக சுருங்குகின்றது என்ற கோசத்தோடு மேற்குலக குப்பைகளுக்கு கீழைத்தேய நாடுகளில் சந்தை விரிக்கப்படுகிறது. அத்துடன் இழிவு கலாச்சார நிலையும் உள் வந்து தொற்றிக்கொள்கிறது . ஆண் பெண் முரண்பாட்டை மேலும் கூர்மையடைய செய்கிறது. பழைய விவாக அமைப்பு முறை தக்கவைக்கவேண்டுமென்றால் விவாகரத்துச் சட்டங்களை இலகுவு காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளுனர் .குறிய காலங்களில் விவாகரத்துபெறக்கூடிய வழிவகைகளை வழிவகைகள் ஆராய்ந்து வருகின்றன.

