09-01-2005, 06:45 AM
கதிமியா பள்ளிக்கு அருகே நடந்தது என்ன?
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050831152224shoes203afp.jpg' border='0' alt='user posted image'>
<b>சன நெரிசலில் அகப்பட்டவர்களின் காலணிகள் தேங்கிக் கிடக்கின்றன</b>
ஷியா மதப்பிரிவினர் புனிதராகக் கருதும் ஹஸரத் மூஸா காசிம் அவர்களின் நினைவு நாள் இன்று.
அதை ஒட்டி ஆயிரக்கணக்கானவர்கள் பாக்தாத் நகரில் உள்ள கதிமியா பள்ளிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த தருணம் இது.
நகரில் டைக்ரிஸ் நதியின் குறுக்கே இருந்த ஒரு பாலத்தை யாத்திரிகர்கள் அடைந்த போது, அங்கே கூட்டம் அலைமோதியது, ஒரே நெரிசல். அந்தக் கூட்டத்தின் இடையே தற்கொலைக் குண்டுதாரிகள் புகுந்துவிட்டார்கள் என்று வதந்திகள் பரவின, எங்கும் ஒரே பதற்றம், அச்சம், பீதி.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050831115304baghdadsacredshrine203index.jpg' border='0' alt='user posted image'>
<b>இறந்தவர்களில் சிலரது சடலங்கள்</b>
அந்த மக்கள் திரள் பாலத்திலிருந்து திமுதிமுவென, தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
இதைத் தாங்கமுடியாமல் பாலத்தின் பக்கச்சுவர்கள் தாங்காமல் விழுந்தன, நிறையப்பேர் நதிக்குள் விழுந்துவிட்டார்கள்.
அதேவேளை, ஜனநெரிசலில் சிக்கி நிறையப் பேர் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
நூற்றுக்கணக்கானவர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக இராக்கிய உடல்நலத்துறை அமைச்சின் கண்காணிப்பாளர் அப்துல் அப்துல்லா கூறுகிறார்.
சம்பவம் நடந்த பாலத்தை அடையும் முன்பாகவே, யாத்திரிகர்கள் வன்முறையை எதிர்கொண்டு, பதற்றம் அடைந்திருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பாலத்தின் செல்லும்போது கூட்டத்தினர் ஏன் அச்சம், பீதி அடைந்து இப்படிச் செயல்பட்டார்கள் என்பதை விளங்கிக்கொள்ள இது உதவும் என்கிறார் எமது பாக்தாத் நிருபர் ஜோன் ப்ரெயின்.
[img]
]http://www.bbc.co.uk/worldservice/images/2...de203.jpg[/img]
<b>சன நெரிசல் </b>
சம்பவ இடத்தில், அவசர சேவைப் பிரிவினர் தொடர்ந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார் அதிகாரி அப்துல் அப்துல்லா.
ஷியா மதப்பிரிவினருக்கு புனிதமிக்க நாளான இன்று, முதலில் செய்யப்பட்ட அந்த எறிகுண்டுத் தாக்குதல், இஸ்லாமிய மதப்பிரிவினருக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்திப் பெருக்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால், இப்போதோ, ஜன நெரிசலில் சிக்கி இவ்வளவு பேர் பலியாகியிருப்பது, அதை விடவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராக் நாட்டுக்கான புதியதொரு அரசியல் சாசனம், ஏற்கனவே, அந்நாட்டின் சுனி-ஷியா மதப்பிரிவினர் இடையே கடுமையான பிளவுகளை, வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறது.
இராக்கிய மக்கள், இந்த அரசியல் சாசனம் மீது வாக்களிக்கும் நோக்கில் தம்மைப் பதிவுசெய்துகொள்ளும் நேரத்தில் இந்த கோரமான சம்பவம் நடந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி சரிவர மதிப்பீடு செய்வது சிரமம்தான்.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>