Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கடலை' போடுவதால் மூளை புற்று நோய் வருமா?
#1
மொபைல் போன்களில் மணிக்கணக்கில் பேசித் தள்ளுபவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆண்டுக் கணக்கில் மொபைல் போன்களில் பேசினாலும் மூளை புற்றுநோய் வராது' என லண்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் புற்றுநோய் கட்டி ஏற்படும் எனவும், காதிற்கு அருகில் வைத்து பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினால் மூளை சூடாகிறது எனவும் ஆளாளுக்கு ஆராய்ச்சி செய்து அதிர்ச்சி முடிவுகளை வெளியிட்டனர். இது உலகம் முழுவதும் பரவி, மொபைல் போன் பயன்படுத்துபவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. மொபைல் போன் நிறுவனங்கள் இதை மறுத்து வந்தன.

இதற்கிடையில் மொபைல் போன்களால் ஆபத்தா என லண்டனில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை "பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் கேன்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர். கட்டுரையில், "மொபைல் போன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் காதுகளையும் மூளையையும் இணைக்கும் நரம்புகள் பாதிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. ஆனால், எங்கள் ஆராய்ச்சியில் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மொபைல் போன்கள் என்பதே சமீபத்திய அறிமுகம் என்பதால் நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் என்ன ஆகும் என இப்போது கூற முடியாது' என கூறப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 200 கோடி பேர் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு மட்டும் புதிதாக 8 கோடி மொபைல் போன்கள் விற்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
"கடலை' போடுவதால் மூளை புற்று நோய் வருமா? - by SUNDHAL - 09-01-2005, 04:20 AM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 05:17 AM
[No subject] - by வெண்ணிலா - 09-01-2005, 05:22 AM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:10 PM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 04:13 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:15 PM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 04:28 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:32 PM
[No subject] - by Rasikai - 09-01-2005, 04:50 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 04:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)