08-31-2005, 06:06 PM
<b>பவதாரிணிக்கு திருமணம்.</b>
<img src='http://img157.imageshack.us/img157/97/pavadharini13500ox.jpg' border='0' alt='user posted image'>
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் திருமணம் செப்டம்பர் 16ம் தேதி கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறவுள்ளது.
இளையராஜாவுக்கு மொத்தம் 3 குழந்தைகள். மூத்தவர் கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
ஒரே மகளான பவதாரிணிக்கும் தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் சபரிராஜன் தான் மணமகன். பி.ஏ. பட்டதாரியான சபரிராஜன் சென்னையில் விளம்பர ஏஜென்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
<img src='http://img157.imageshack.us/img157/2586/pavadharini1700cd.jpg' border='0' alt='user posted image'>
திருமணம், இளையராஜாவுக்கு மிகவும் ராசியான கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு செப்டம்பர் 18ம் தேதி சென்னை சாந்தோம் ராமநாதன் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அப்பாவின் வழியில் இசையில் ஞானம் பெற்றவரான பவதாரிணி, நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடித்த ராசையா என்ற படத்தில் வரும் மஸ்தானா, மஸ்தானா என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் பாடல்.
ரேவதி இயக்கிய மித்ரு மை பிரண்ட் என்ற படத்திற்கும் சில கன்னடப் படங்களுக்கும் பவதாரிணி இசையமைத்துள்ளார். தற்போது இவர் அமிர்தம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக பவதாரணி தேசிய அளவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<b> .. .. !!</b>