11-02-2003, 12:31 PM
ஐயா சீலன் நீங்கள் எதையும் சொல்லி மழுப்பவேண்டாம். நீங்கள் புலம்பெயர்ந்த மக்களை மாத்திரம் சாடவில்லை.. உதவிசெய்த அத்தனை அரசாங்கங்கள்.. பரிதாபம் பார்த்து வன்னிமக்களுக்கு உதவிசெய்த அமைப்புக்கள் அத்தனையையும்தான் கண்துடைப்பென்று சொல்லியுள்ளீர்கள். ஐயா ஒன்றரை மில்லியனை துரத்தியடித்துவிட்டு தமிழருக்காகப்போராடுகிறோம் என்றுசொல்லும் துரோகிகளைவிட 5 இலட்சம் புலம்பெயர்ந்து இருக்கும் மக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றானே சிங்களவன் அவன் எனதுபார்வையில் உயர்ந்து நிற்கிறான். புலம்பெயர்ந்தவர்களை துரொகியென்று வர்ணித்தவர்களைவிட அவர்களை ஆதரித்து பராமரித்தானே மேல்நாட்டவன் அவன் எனதுபார்வையில் உயர்ந்து நிற்கிறான். ஐயா சுரண்டுமட்டும் சுரண்டிவிட்டு தந்தவரை தூற்றித்திரியும் பங்கர்க்காரன் பழக்கம் என்னிடமில்லை. வன்னி ஆட்டுப்பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தவன் தவிர அத்தனைபேரும் துரோகி இது நீங்கள் சொல்லியது.. அதை வலியுறுத்தியுள்ளீர்கள் நன்றி. எதற்கும் நீங்கள் எழுதிய கருத்துக்களைப் படித்துப்பாருங்கள் உங்களுக்குப் புரியும். ஐயா நீங்கள் எழுதியது உங்களுக்கே நியாயமா..? உங்கள் நெஞ்சைத் தொட்டுப்பார்த்து நித்திரைக்குப் போகும்போது கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
:!:
:?:
நன்றி வணக்கம்.
:!:
:?:
Truth 'll prevail

