11-02-2003, 08:50 AM
தணிக்கை Wrote:புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக் கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான வரைவில் முஸ்லிம்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லை என்று ரவூப் ஹக்கீம் தெரி வித்துள்ளார். அதற்கான மாற்று யோசனைகளைத் தாம் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க லண்டனில் வைத்து என்னிடம் புலி களின் மாற்று யோசனைகளைக் கையளித்தார். இந்த யோசனை களுக்குப் புறம்பாக எங்களுடைய யோசனைகளை முன்வைக்குமாறும் என்னிடத்தில் இருந்து வேண்டிக் கொண்டிருக்கின்றார். இது நாம் எங் களுக்குள்ளே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தளவில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல எதுவுமே இதில் உள்ளடக்கப்பட வில்லை என்பது எங்களுடைய முடிவு.
நாங்கள் எங்கள் மாற்று யோசனை களை சமர்ப்பிக்கிறபோதும் அவை இதற்கு முற்றிலும் வித்தியாசமான தாக அமையும் என்பதைத்தான் இப் போது கூறமுடியும்.
மூன்று யோசனைகளையும் அதாவது, அரசின் யோசனைகள், புலிகளின் யோசனைகள், எங்களது யோசனைகள் என்று அனைத்தையும் பரிசீலனைக்கு எடுக்கின்ற போது தான் ஒரு சரியான தீர்வை நாம் பெறமுடியும்
<img src='http://images.animfactory.com/animations/animals/frogs/frog_croaking_md_clr.gif' border='0' alt='user posted image'>

