08-30-2005, 09:02 PM
எதை விட்டுவிட வேண்டுமோ, எதற்காக அவஸ்தைப் பட வேண்டுமோ, அதிலேயே மனத்தைச் செலுத்துகின்றவர் கரண சுகத்தைத் தேடுகின்றவர் ஆவர். தன் சொந்த நலனை விட்டுவிட்டு பிறர் நலனைக் கண்டு பொறாமை படுகின்றவர் ஆவர்.
பிரியமுள்ளவரிடம் நெருக்கம் கூடாது. அதே போன்று விருப்பமில்லாதவரிடமும் நெருக்கம் கூடாது. பிரியமுள்ளவரைக் காண்பதும், பிரியமில்லாதவரைக் காண்பதும் வேதனை தருவதாகும்.
ஆகவே எதன் மீதும் அன்பு செலுத்த வேண்டாம்; ஏனெனில் பிரியமுள்ளவர்களிடமிருந்து பிரிவது வேதனை தரும். பிரியமில்லாதவரிடம் அன்பில்லை, அதனால் வேதனைதான் மிஞ்சும்.
அளவிட முடியாத அன்பிலிருந்துதான் வேதனை பிறக்கிறது. அங்கிருந்துதான் பயமும் பிறக்கிறது. பந்தத்திலிருந்து விடுபட்டவனுக்கு வேதனை இல்லை. பயமும் இல்லை.
பிரியத்திலிருந்து பிறப்பதுதான் வேதனை; அன்பிலிருந்து பிறப்பதுதான் பயம்; இதிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் கிடையாது.
பந்தப் பிடிப்பிலிருந்து வேதனை பிறக்கிறது. அதிலிருந்து பயமும் பிறக்கிறது. பந்தப் பிடிப்பிலிருந்து விடுபட்டவனுக்கு வேதனையும் பயமும் இல்லை.
பேராசையிலிருந்து வேதனை பிறக்கிறது. பேராசையிலிருந்து பயம் பிறக்கிறது. பேராசையிலிருந்து முற்றிலும் விடுபட்டவனுக்கு வேதனை இல்லை, பயமும் இல்லை.
எதையும் துல்லியமாகப் பார்க்கவும், நற்குணங்களுடன் நல் வாழ்க்கையையும், சத்தியத்தையும் உணர்ந்தவர்தான், எதை நிறைவேற்ற வேண்டுமோ, அதை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர். அவரை மக்கள் அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள்.
சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்ளாதவரும் தியானத்தின் பலனை அறிந்து அதிலே நிலைத்திருப்பவரும், விவரிக்க முடியாத "நிர்வாணத்தை" சதா எண்ணிக் கொண்டிருப்பவரும் யாரோ, அவரே சன்யாசியின் மூன்றாவது கட்டத்தை அடைந்தவராவார்.
நல்ல காரியங்களைச் செய்து இப்பிறவியை விட்டு அடுத்த பிறவிக்குச் செல்பவரை, அவர் முற்பிறவியில் செய்த நல்ல காரியங்களே அவரது சுற்றத்தாரைப் போல் வரவேற்கும்.

<b> .. .. !!</b>