08-30-2005, 10:41 AM
அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) :
கற்பனையில் தான். . . .
------------------------------------------
கண்களுக்கெட்டாத்(?) திசையில்
கண்டறியமுடியாத்(?) தேசமதில்
கண்டறியப்பட்ட காதலியே,
கலங்காதே!
உன் நயன நதிகளின்
பெருக்கெடுப்பினைத்
தடுத்துவிடுதற்கு என்
கைக்குட்டைகள் ஏனோ
பாக்கியம் செய்யவில்லைத்தான்.
ஆனாலும் என்ன?
என் இதயத்தையே
இணையத்தில் ஏந்திவரும்
இலத்திரன்களின்
வெளிச்ச வெளிப்பாடுகளே,
உன் விழிநீரைத்
தடுத்துவிடும்
என்கை விரல்களாக,
உன் பிடரிமயிர் கோதி
மார்போடு சாய்க்கும்
என்னிரு கரங்களாக,
காரிகையே கலங்காதே,
இணையத் துடிக்கும் இதயங்களை
இணையம் இணைத்து வைக்கும்.
கற்பனையில் தான். . . .
------------------------------------------
கண்களுக்கெட்டாத்(?) திசையில்
கண்டறியமுடியாத்(?) தேசமதில்
கண்டறியப்பட்ட காதலியே,
கலங்காதே!
உன் நயன நதிகளின்
பெருக்கெடுப்பினைத்
தடுத்துவிடுதற்கு என்
கைக்குட்டைகள் ஏனோ
பாக்கியம் செய்யவில்லைத்தான்.
ஆனாலும் என்ன?
என் இதயத்தையே
இணையத்தில் ஏந்திவரும்
இலத்திரன்களின்
வெளிச்ச வெளிப்பாடுகளே,
உன் விழிநீரைத்
தடுத்துவிடும்
என்கை விரல்களாக,
உன் பிடரிமயிர் கோதி
மார்போடு சாய்க்கும்
என்னிரு கரங்களாக,
காரிகையே கலங்காதே,
இணையத் துடிக்கும் இதயங்களை
இணையம் இணைத்து வைக்கும்.
Suganthan,V
www.geocities.com/vsuganthan
www.geocities.com/vsuganthan

