Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருகதை
#59
வணக்கம் உறவுகளே மீண்டும் நீண்ட இடைவெளியின் பின் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி

<span style='font-size:30pt;line-height:100%'>விசா</span>


எனக்கு வயது 30
திருமணமாகிவிட்டது மனைவிக்கு வயது 25
ஒரு மகன் இருக்கிறான் வயது 2
மனைவி இப்போ அடுத்த தரம் கரப்பமாகி 8மாத கர்ப்பிணி பிரான்ஸ் நாட்டிற்கு வந்து 10 வருசமாகிது பாரீசிலை இருக்கிறன்
எனக்கோ எனது மனைவிக்கோ பிரான்ஸ் நாட்டு வதிவிட அனுமதி பத்திரம் இன்னமும் கிடைக்க வில்லை.

இனி எனது மிச்ச சோகத்திற்கு போகலாம் வாருங்கள்

பாரிசிலை ஒரு உணவு விடுதியிலை வேலை செய்யிறன். நண்பன் ஒருதனின்ரை விசாவிலை தான் அது முதலாளிக்கும் தெரியும். அங்கை எட்டு வருசத்திற்கு முதல் பாசையும் தெரியாமல் கோப்பை கழுவிற வேலைக்கு போய் சேந்து பிறகு படிப்படியா வேலையை பிடிச்சு இண்டைக்கு நான் தான் அங்கை பிரதான சமையல் காரன்.

முதலாளியும் நல்லவன் வயசான கிழவன் எங்களிட்டை எப்பிடி அன்பா வேலை வாங்கிறதெண்டு அவனுக்குதெரியும் இப்ப அவனுக்கு ஏலாது வயசு போட்டு தெண்டு கடையை ஒருத்தனுக்கு வித்து போட்டான்.

வித்து போட்டு போகேக்கைநல்லா மாடு மாதிரி வேலை செய்வன் எண்டு என்னை பற்றி நல்லா சொல்லி போட்டு என்ரை விசா பிரச்சனையையும் சொல்லி பேட்டுதான் போனவன். புதுசா வாங்கினவனுக்கு ஒரு 40 வயது வரும் ஆனால் ஆள் சரியான துன்பம் பிடிச்சவன். தான் முதலாழி எண்ட கொழுப்பு மனிசரை மதிக்க தெரியாத ஒருத்தன்.ஒரு நாழைக்கு ஒரு பெட்டையோடை வந்து விடிய விடிய தண்ணியடிச்சு கொண்டிருப்பான்.

சரி சரி அது அவனின்ரை சொந்த பிரச்சனை என்ரை பிரச்சனைக்கு வருவம். நான் இருக்கிற இடத்திலை இருந்து வேலைக்கு போக ஒரு அரை மணித்தியாலம் பாதாள தொடர் வண்டியிலை (சுரங்க ரெயின்)போக வேணும் அங்காலை ஒரு 5 நிமிச நடை .வேலையிடம்

உந்த சுரங்க வண்டி நிலையத்திலை இருந்து வெளியிலை போகேக்கைஆண் பெண்ணெண்டு சில வயசான சிலபேர் மலிஞ்ச வைனைவாங்கி குடிச்சு கொண்டு போற வாற ஆக்களிட்டை காசு கேட்டு கொண்டும் இருப்பினம். வந்த புதிசிலை அவையளை பாக்கேக்கை எனக்கு அதிசயமா தான் இருந்தது இஞ்சையும் பிச்சைகாரரா எண்டு.

பிறகு பழகிட்டிதுசில நேரத்திலை நானும் சில்லறையளை போட்டிட்டு போறனான்.சில நேரங்களிலை அதிலை வழைமையா இருந்த ஆக்கள் காணாமல் போடுவினம் வேறை புது ஆக்கள்வருவினம்.காணாமல் போனவை வேறை இடம் போனவையா அல்லது இறந்திட்டினமா எண்டெல்லாம் எண்டெல்லாம் எனக்கு கவலை இல்லை

இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்.

அவனுக்கு முன்னாலை உள்ள தொப்பியிலை சில சனம் காசு போடும். சேந்த காசுக்கு வழமை போல வைனும் வாங்கி தனக்கும் நாய்க்கும் ஏதாவது சாப்பாடு வாங்கி சாப்பிட்டிட்டு நான் இரவு வேவை முடிஞ்சு வரேக்கை பக்கத்திலை ஒரு கடுதாசி மட்டையை போட்டிட்டு அதிலை அவனும் அவன்ரை தலை மாட்டிலை அவனின்ரை நாயும் நல்ல நித்திரை கொண்டு கொணடிருப்பினம்

எனக்கு அவனை பாத்தாலே எரிச்சலா வரும் இளம் வயசு கைகால் எல்லாம் ஒழுங்கா இருக்கு ஏன் என்னை மாதிரி உழைச்சு சாப்பிடலாம்தானே அதை விட்டிட்டு பிச்சையெடுத்து கொண்டு இவனுக்கு ஒரு சதம் கூட போட கூடாது எண்டு மனசுக்கை நினைச்சு கொண்டு வேலைக்கு போவன்.


திரும்பவும் ஆற்ரையோ கதையை சொல்லி கொண்டு போறன் என்ரை கதைக்கு வருவம். நேற்ரைக்கு வேலைக்கு வெளிக்கிட்டு அவசரமா தொடர் வண்டியை பிடிப்பம் எண்டு ஒடினன் வண்டி வரேல்லை யரோ தண்டவாளத்திலை குதிச்சு தற்கொலை செய்திட்டாங்களாம் அதாலை வண்டி வரதாமதமாகும் எண்டு அறிவிச்சாங்கள்.

சே நான் வேலைக்கு போற நேரத்திலையா எவனாவது தற்கொலை செய்ய வேணுமெண்டு மனதுக்குள் திட்டியவாறே



வேலையிடத்திற்கு எனது கைத்தொலை பேசியில் நிலைமையை அறிவித்து விட்டு அரை மணி நேரம் பிந்தி வந்த வண்டியில் வேலையிடத்திற்கு போனால் அங்கை அண்டைக்கெண்டு முதலாளி முன்னுக்கு நிண்டான்.

நான் அவனிடம் போய் வணக்கம் எண்டன் அதுக்கு அவன் என்னை பாத்து நக்கலா வாங்கோ முதலாளி வாங்கோ வணக்கம் எண்டான். எனக்கு கோவம் பத்தி கொண்டு வந்தது எண்டாலும் அடக்கி கொண்டு பிரச்சனையை விளங்க படுத்த முயல சரி சரி போய் வேலையை பார் எண்டு ஏதோ நாயை துரத்திற மாதிரி சொன்னான்.

நானும் பேசாமல் போய் வேலையை தொடங்கினன். என்ன செய்ய நாய் வேடம் போட்டா குலைச்சு தானே ஆகவேணும்.இரவு 12 மணியாகி கொண்டிருந்தது எனது வேலையை முடித்து விட்டு புறப்பட தயாரான போது வழமை போல ஒரு பெண்ணுடன் தண்ணியடிச்சு கொண்டிருந்த முதலாளி காரன் என்னை பாத்து சொன்னான் பொறு நாங்கள் சாப்பிட வேணும் எண்டான் .

நான் சொன்னன் இன்னும் அரை மணி நேரத்திலை கடைசி றெயின் கெதியா சாப்பிட்டா நல்லது எண்டு சொல்ல அவனோ தனது நண்பியிடம் பாத்தாயா வேலைக்கு வந்ததே பிந்தி அதிலை அய்யா சொல்லேக்கை நாங்கள் சாப்பிட வேணுமாம் என்றான்.



அவனின்ரை நண்பியோஒருபடி மேலே போய் எதுக்கு அவருக்கு கரைச்சல் குடுக்கிறாய் பேசாமல் அவரை வீட்டிலை இருக்க விட்டிட்டு மாமதா மாதம் சமபளத்தை அனுப்பி விடலாமே இப்ப என்ன றெயின் இல்லாட்டி நடந்து போ காலிருக்குதானே எண்ட அங்கு நின்ற மற்றைய வேலை காரர் எல்லாரும் சிரிக்க எனக்குஅவமானமா போட்டுது.

முதலாளி ஏதும் சொன்னாலும் பறவாயில்லை சம்பளம் தாறவன் எண்டு பொறுக்கலாம் ஆனால் ஆனால் அவனின்ரை ஒட்டுண்ணியெல்லாம் என்னை நக்கலடிக்கிது எண்டு எனக்கு ரோசம் பொங்கி கொண்டு வர ஒருநிமிசம் என்ரை நிலைலைமை எல்லாத்தையும் மறந்துபோய் கோவத்திலை நீ விரும்பினா போட்டு சாப்பிடு எண்டு முதலாளியிட்டை சொல்லி போட்டு வெளியேறிட்டன்.

வீட்டை போய் மனிசியிட்டை பிரச்சனையை சொன்னன். ஏதோ கோவத்திலை விட்டிட்டு வந்திட்டன் விசாவுமில்லாமல் வேறை வேலை எடுக்கிறதும் கஸ்ரம் எங்கை வேலைக்கு போனாலும் முதல் விசா மற்றது வேலை செய்த அனுபவம் இரண்டையும்; தான் கேப்பாங்கள் ஏதோ ஒரு எட்டு வருசம் ஒரு பிரச்சனையுமில்லாமல் காலம் ஒடிட்டிது வேலையை விட்டா விசா இல்லாமல் உதவி பணம் கூட கிடைக்காது. சரி எதுக்கும் நாளைக்கு போய் அவனிட்டை மன்னிப்பு கேட்டிட்டு வேலையை செய்வம் எண்டு மனிசிக்கு சொல்லிப்போட்டு படுத்திட்டன்.

இண்டைக்கு காலைமை எழும்பி வழமை போலை வேலைக்கு போனன் அங்கை என்ரை இடத்திலை புதிசா வெள்ளை ஒருத்தன் வேலைசெய்து கொண்டு நிண்டான்.முதலாளியிட்டை போய் காலை வணக்கம் எண்டன். நிமிந்து பாத்து என்ன வேணுமெண்டான்.நான் நேற்று செய்தது பிழை மன்னிச்சு கொள்ளுங்கோ இனி அப்பிடி தவறு வராமல் நான் நடக்கிறன் எண்டு மன்னிப்பு கேட்டன்.

முதலாளியோ உன்னை எனக்கு தெரியாது போகலாம் எண்டான். அவனுக்கு தெரியும்எனக்கு விசா இல்லாத படியால் சட்டப்படி என்னால் எதுவும் செய்ய முடியாது எண்டு. விசா இல்லாத நாயே உனக்கெல்லாம் எதுக்கு ரோசம் கோபம் எண்டு என்னை நானே திட்டியவாறு சுரங்க ரயில் நிலையத்தை நேக்கி நடந்தன்.

இனியென்ன செய்யலாம் தெரிந்த தமிழாக்களிட்டைதான் நிலைமையை சொல்லி வேலை கேக்க வேணும்.;வீட்டையும் உடனை போக மனம் வராமல் சுரங்க இரயில் நிலைய படியிலை கொஞ்ச நேரம் இருந்தன். அந்த கித்தார் கார பெடியன் தொப்பியை முன்னுக்கு வைச்சிட்டு கித்தாரை தட்டினபடி ஜோர்ச் மைக்கலின்ரை பிரீடம் பிரீடம் எண்ட எண்ட பாட்டை பாடிக்கொண்டிருந்தான்.

அவனை கொஞ்ச நேரம் உத்து பாத்தன் என்ன கவலை இல்லாதா மனிதன் மாத கடைசியிலை வாடகை பிரச்சனையா? மின்சார கட்டணமா?தண்ணி கட்டணமா? சீட்டா வட்டியா? ஊருக்கு பணம் அனுப்ப வேண்டுமா? என்று எதுவித பிரச்சனையுமற்ற ஒருமனிதன் அன்றாடம் கிடைக்கிற பணத்திலை தனக்கும் தன்ரை நாய்க்கும் உணவு மிச்சத்துக்கு மலிந்த வைன் அதோடை பிரச்சனை முடிஞ்சுது.

இப்போ என்னை பாக்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது அவன் கடவுளாக தெரிந்தான் அவன் பாடும் பாடல் தேவ கானமாக இனித்தது சட்டை பையினுள் கையை விட்டு சில சில்லறைகளை அவனது தொப்பிக்குள் போட்டு விட்டு வீடு நோக்கி பயணமானேன்
; ;
Reply


Messages In This Thread
ஒருகதை - by shiyam - 03-28-2005, 06:53 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 06:59 PM
[No subject] - by Danklas - 03-28-2005, 08:36 PM
[No subject] - by shanmuhi - 03-28-2005, 10:01 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 10:58 PM
[No subject] - by shanmuhi - 03-28-2005, 11:07 PM
[No subject] - by tamilini - 03-28-2005, 11:33 PM
[No subject] - by hari - 03-29-2005, 06:26 AM
[No subject] - by thivakar - 03-29-2005, 07:51 AM
[No subject] - by Vasampu - 03-29-2005, 11:07 AM
[No subject] - by Vasampu - 03-29-2005, 11:09 AM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:05 PM
[No subject] - by Thusi - 03-29-2005, 12:06 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 12:07 PM
[No subject] - by MUGATHTHAR - 03-29-2005, 12:15 PM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:24 PM
[No subject] - by kuruvikal - 03-29-2005, 12:35 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 01:05 PM
[No subject] - by shobana - 03-29-2005, 02:32 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 05:26 PM
[No subject] - by THAVAM - 03-29-2005, 10:00 PM
[No subject] - by shiyam - 03-30-2005, 01:57 AM
[No subject] - by THAVAM - 03-30-2005, 08:20 AM
[No subject] - by aswini2005 - 03-30-2005, 12:31 PM
[No subject] - by shiyam - 03-30-2005, 12:41 PM
[No subject] - by shiyam - 04-26-2005, 04:06 PM
[No subject] - by Mathan - 04-26-2005, 05:12 PM
[No subject] - by shiyam - 04-26-2005, 05:36 PM
[No subject] - by Mathan - 04-26-2005, 05:39 PM
[No subject] - by KULAKADDAN - 04-26-2005, 09:43 PM
[No subject] - by shanmuhi - 04-26-2005, 10:27 PM
[No subject] - by shiyam - 04-27-2005, 10:25 PM
[No subject] - by Danklas - 04-27-2005, 11:12 PM
[No subject] - by shobana - 04-28-2005, 11:42 AM
[No subject] - by sinnappu - 04-28-2005, 12:30 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 06:30 PM
[No subject] - by THAVAM - 06-04-2005, 07:53 PM
[No subject] - by Mathan - 06-04-2005, 08:25 PM
[No subject] - by tamilini - 06-04-2005, 09:05 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 10:07 PM
[No subject] - by tamilini - 06-04-2005, 10:10 PM
[No subject] - by shiyam - 06-04-2005, 10:13 PM
[No subject] - by AJeevan - 06-04-2005, 10:18 PM
[No subject] - by THAVAM - 06-04-2005, 10:20 PM
[No subject] - by sathiri - 06-04-2005, 10:25 PM
Re: ஒருகதை - by AJeevan - 06-04-2005, 11:30 PM
[No subject] - by Mathan - 06-04-2005, 11:59 PM
[No subject] - by KULAKADDAN - 06-06-2005, 10:27 PM
[No subject] - by இளைஞன் - 06-06-2005, 10:37 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 10:54 PM
[No subject] - by இளைஞன் - 06-06-2005, 11:06 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 11:21 PM
[No subject] - by KULAKADDAN - 06-06-2005, 11:49 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 11:54 PM
[No subject] - by அனிதா - 06-07-2005, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 12:57 AM
[No subject] - by Mathan - 06-07-2005, 12:57 AM
[No subject] - by AJeevan - 06-07-2005, 01:41 AM
[No subject] - by shiyam - 08-29-2005, 11:50 PM
[No subject] - by Danklas - 08-30-2005, 04:47 AM
[No subject] - by வெண்ணிலா - 08-30-2005, 06:41 AM
[No subject] - by shiyam - 08-30-2005, 06:55 AM
[No subject] - by tamilini - 08-30-2005, 10:31 AM
[No subject] - by KULAKADDAN - 08-30-2005, 11:24 AM
[No subject] - by Rasikai - 08-30-2005, 12:37 PM
[No subject] - by tamilini - 08-30-2005, 01:17 PM
[No subject] - by KULAKADDAN - 08-30-2005, 03:14 PM
[No subject] - by shanmuhi - 08-30-2005, 07:51 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 09:14 AM
[No subject] - by Mathan - 08-31-2005, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)