11-01-2003, 01:17 PM
யாழ்/yarl Wrote:வானொலியை உருவாக்கும்பொழுது சில ஒப்பந்தங்களை பணிப்பாளர்கள் இறுக்கமாக போடாமையும் இப்படியான குளறுபடிகளுக்கான காரணம்.
ஒரு அறிவிப்பாளரின் கடமை என்ன தகுதி என்ன என்பதை வானொலிகளின் பணிப்பாளர் ஆரம்பமுதலே தெளிவுபடுத்தவேண்டும்..
இல்லாவிடில் எத்தனைமுறை வானொலிகள் புதிது புதிதாக திறந்தாலும் இதே பிரச்சனை தோன்றும.
இது முற்றிலும் உண்மையான விடயம்.இதை அறியாதளவுக்கு உரிமையாளர் ஒன்று சிறுபிள்ளையுமில்லை. ஆனால் எப்படி இது நிகழ்ந்தது...? <b>அதற்கும் ஒரு துன்பியல் சரித்திரம் உண்டு.</b>
ரிபிஸி விட ஜனரஞ்சகப் போக்கையும் கொண்டிருந்ததனால் ஆரம்ப காலத்தில் அப்போதைய அறிவிப்பாளர் ..குமார் ஐரோப்பிய வானலைகளில் பெரும் செல்வாக்கையும் அதே நேரம் ஜனரஞ்சகத்தையம் பெற்றிருந்தார்.
ஆனால் அப்போதும் அந்த வானொலியின் மக்கள் நேரமான மலரும் மடல்.
பின்னர் <b>தீப சுதன்</b> என்ற ஒரு இளைஞன் இணைந்துகொண்ட போது அவரது செய்தி வாசிப்புத் திறமைக்கு முன்னர் இவர் நிற்க முடியாமல் போனது.
இருந்தாலும் நிகழ்ச்சி விடயங்களில் <b>தீப சுதன் எந்த வகையிலும் ..குமாருக்கு போட்டியாக அமையவில்லை</b>.எனினும் வழமை போன்று சில நேயர்கள் சுதனுக்குத் தமது ஆதரவினை வழங்கி வந்தனர்.
பின்னர் இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் றமணன் அவர் இங்கு வந்திருந்தார் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.
<b>காலப்போக்கில் றமணனின் பாணியிலும்,அவர் நிகழ்ச்சிகளினாலும் கவரப்பட்ட மக்கள் றமணனுக்கு தமது ஆதரவை வழங்க ஆரம்பித்தார்கள்.இந்தத் தருவாயில் ஆரம்பத்தில் இதை உணராத ..குமார் பல நல்ல நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தார்</b>.
எனினும் காலப்போக்கில் ஜெர்மன்,சுவிஸ் என மக்களை சந்திக்க அவர் பயணித்த இடங்களிலெல்லாம் மக்கள் றமணனைப் பற்றியே கதைத்த போது தான் தான் வீழ்ந்து கொண்டு வருவதை உணர்ந்தார்.
<b>அப்போதிருந்து தான் தனது நிர்வாக ஆளுமையை வெளிக்கொண்டுவர முனைந்தார்</b>.
இளைஞர்கள் வரிசையில் அப்போது சுதன்,றமணன்,சங்கர் முதற்கொண்டு பலரும் திறமைசாலிகளாகவே காணப்பட்டனர்.ஒவ்வொரு இளைஞனின் நிகழ்ச்சியையும் கட்டுப்படுத்தத் தொடங்கினார்.
சில உதாரணங்களைத் தருகிறேன்.
* நிகழ்ச்சியை பிடுங்கியது.
*
* சுதனுக்கும் றமணனுக்குமிடையில் செய்தி வாசிப்பில் அவர்களுக்கே தெரியாமல் போட்டியை உருவாக்கியது..
<b>இதையெல்லாம் விட சம்பளம் இல்லாமல் வேலை செய்த இந்த இளைஞர்களுக்கு மக்கள் தமது சொந்த விருப்பின் பேரில் கடித உறைகளுக்குள் வைத்து அனுப்பும் பண அபகரிப்புகள்.... </b>இப்படிப் பல
எனவே மக்கள் செல்வாக்கை தான் இழந்ததாக நினைத்த ..குமார் <b>நிர்வாக</b> உரிமைக்காக தனது கவனத்தைத் திருப்பத் தொடங்கியிருந்தார்.
எனினும் றாமராஜன் அதனை விட்டுக்கொடுக்கவுமில்லை.
வானொலியின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் இவர்களால் இறுதியாகப் போடப்பட்ட திட்டம் தான் <b>சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி.</b>
இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 'வை ராஜா வை
மக்களிடம் பணம் கேட்ட முறை அப்படியாகத்தான் இருந்தது.அதாவது 5000 மார்க் தாருங்கள் நிகழ்ச்சி முடிவில் 7500 தருகிறோம் என்று தான் கலெக்ஷன் நடந்தது.
என்ன செய்வதாம் விதிப்படி நிகழ்ச்சி படு தோல்வியடைய <b>ஒருவரில் ஒருவர் குற்றஞ்சுமத்தும் படலம் ஆரம்பமானது</b>.
இதன் விளைவில் ஊரெல்லாம் அதிகமான கடன் தொல்லை வானொலியின் எதிர்காலத்தினை பெரிதும் பாதித்திருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது தான் கழன்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டி வந்த ..குமார் தருணம் பார்த்துக்கொண்டிருக்கையில் அறியாதவர்களாய் பலியானார் றமணன்....
எப்படியென்று தெரியுமா?
<b>வானெலை நிகழ்ச்சிக்கு ஒரு தலைப்பு </b>வைத்ததன் மூலம்.365 நாள் காலை நிகழ்ச்சியும் தலைப்பு வைக்க வேண்டும் என்றால் சமூகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தலைப்பு வரத்தானே வேண்டும்?
இந்த நாள்.. அந்தத்தலைப்பில் உரையாடிய சில நேயர்களின் அதிருப்தியை றமணன் சந்திக்க வேண்டி வந்தது.அவர்கள் சாதாரண நேயர்கள் அல்ல.,..<b>குமாரின் தீவிர விசுவாசிகள்</b>.
எனவே காரணம் தேடிக்கொண்டிருந்த குமாரும் துணைவியாரும்,இதைப்பிடித்துக்கொண்டு விசயத்தைப் பெரிதாக்கி றமணனை வானலையில் <b>அவமானப்படுத்தினார்</b>.தனது நிகழ்ச்சி நேரத்தினைத் தனக்காகத்தானே றமணன் செய்யப்போய் இப்படி அவமானப் பட்டுவிட்டானே என்ற கோபத்தில் <b>காண்டீபன் இதற்கு எதிரான வேலைகளில் இறங்கினார்</b>.சுதன் இளைஞர் அணியில் இருந்தார்.றாம ராஜ் இல்லாத நிலையில் சிக்கல் விஸவரூபம் எடுத்து
பிரிவு அளவுக்கு சென்றது.
இரவோடு இரவாக தன்னோடு இணைந்து கொள்ளும் படி சிலருக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அவசர அவசரமாக அவர்கள் றாமுக்கு சொல்ல அவருக் இந்தியாவில் இருந்து உடனே புறப்பட..
<b>விடயங்கள் அறிந்த..குமார் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான சிடி எம்டிக்களை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்</b>.
அப்படியானால் பழைய ரிபிஸியின் அறிவிப்பாளர்கள் சிலர் ஏன் ..குமாரோடு சென்றனர்?
<b>இங்குதான் ..குமாரின் பிரதேச வாதக் குணம் ஆரம்பித்தது</b>.
தன்னை மட்டக்களப்பான் என்று எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்று கூறி அழுது வடித்து தன்னோடு வேலை செய்த மட்டக்களப்புப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை இழுத்துக்கொண்டு வெளியேறினார்.
<b>இங்குதான் ஈடிபிஸியின் ஆரம்பத்திற்கு அடிக்கல்லானது</b>.
பின்னர் ஈடிபிஸி உருவாவதற்கு சுந்தரும் இவரும் இணைந்த கதையும் சுந்தரின் பலவீனமும் பலமும் என்று ஒன்று இருக்கின்றது. அதையும் பார்ப்போம்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

