Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இருதமிழர்களை விடுவிக்க
#4
களுத்துறை தெபுவன என்ற இடத்திலுள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு தமிழ் இளைஞர்களின் சடலங்களை மீட்டுள்ளதாக தெபுவன பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் தமிழ் இளைஞர்களினுடையது என உறுதிப்படுத்தியுள்ள தெபுவன காவல்துறையினர் இவர்கள் இருவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஏறாவுூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பாடசாலை வீதியில் வசிக்கும் கந்தையா சசிகுமார் (அகவை 27), காத்தமுத்து நல்லதம்பி (அகவை 30) ஆகியோர் கட்டுநாயக்கவில் வைத்து கடத்தப்பட்டிருந்தனர். இவர்களே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சசிக்குமாரின் சகோதரி ஒருவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பியுள்ளார். இவரை அழைத்துச் செல்லும் பொருட்;டே சசிக்குமாரும் அவரது தாயாரும் மற்றும் காத்தமுத்து நல்லதம்பி என்பவரும் ஊர்தி ஒன்றில் புறப்பட்டு கொழும்பு வந்துள்ளனர்.

இவர்கள் வானு}ர்தி தளத்தில்; இருந்து சகோதரியுடன் திரும்பும் வழியில் நீர்கொழும்பு வீதியில் வைத்து இலக்கத் தகடற்ற வெள்ளை நிற ஊர்தி ஒன்றில் வந்த சிலர் இடைமறித்து தாங்கள் காவல்துறையினர் எனக் கூறி இரு இளைஞர்களையும் விசாரித்து விட்டு வீடு செல்ல அனுமதிப்பதாகவும் கூறி பலாத்காரமாக கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து தாயாரும் சகோதரியும் பயணத்தை தொடர்ந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியிடம் முறையிடப்பட்டது. இதனையடுத்து காவல்துறை மா அதிபரிடம் இது தொடர்பில் திரு. ஜெயானந்தமூர்த்தி முறையிட்டிருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை களுத்துறை தெபுவன பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அச்சடலங்களை இனங்காணாத காவல்துiயினர் இவர்கள் நீர்கொழும்பு வீதியில் வைத்து கடத்தப்பட்ட மேற்படி நபர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

அவ்விரு சடலங்களும் களுத்துறை போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankathi.net/index.php?option=c...=2311&Itemid=41
vasan
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 08-29-2005, 03:15 AM
[No subject] - by வினித் - 08-29-2005, 08:05 AM
[No subject] - by Vasan - 08-29-2005, 08:37 AM
[No subject] - by Anandasangaree - 08-29-2005, 09:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)