08-29-2005, 03:02 AM
<img src='http://img253.imageshack.us/img253/5380/uthayamaavaayaa6eb.jpg' border='0' alt='user posted image'>
படிக்க என சென்ற என்னை
பிடிவாதமாக இடை மறித்து
காதல் செய் காதல் செய் என
காதோரம் பலமுறை சொன்னவனே
நான் ஞாயிற்றுக்கிழமைகளில்
நீண்டநேரம் எங்கிருப்பேன் என
நன்கு உணர்ந்த நல்லவனே
நாடோடி மன்னவனே
செல்லிட தொலைபேசி குறுந்தகவலை
செல்லமாக நீ எனக்கனுப்பி
குதுகலமாக படித்த என் மனதை
குலைத்தாயே ஒரு விநாடியில்
கணக்கியல் பாடமோ
கிறுக்கலானது எனக்கு
வர்த்தக பாடமும்
வெறுப்புக்குள்ளாக்கியது
பொருளியல் பாடமும்
பொலிவிழந்து போனது
கணித பாடமோ என்னை
கண்சிமிட்டி நையாண்டி பண்ணியது
எதற்காக அன்பே இப்படி
என்னை கோவப்படுத்துகின்றாய் :evil:
காதலனே காதலனே
காதலையும் அளவோடு
காதலிக்க பழகிக்கொள்
அளவுக்கு மீறினால் உனது
அன்புக் காதலும் நஞ்சாகிவிடும் :evil:
இது மட்டுமா
இன்னும் இருக்கு
அதையும் கேள் :!:
நிம்மதியாக உன் இனிய
நினைவுகளுடன் அமைதியாக
நித்திரை கொண்ட என்னை
சத்தமில்லாமல் இருந்த
அர்த்த சாமத்தில்
உனது தொலைபேசி சினுங்கலால்
எனது தூக்கத்தைக் கலைத்து
"நான் கண்ட இன்பம் எல்லாம்
நீ கொண்ட அன்பினால் தான் " என்று
இரவு வணக்கமும் கூறி
இன்முகத்துடன் விடைபெற்றாயே
தூக்கத்தில் இருந்த என்னை
தொல்லை பண்ணுவதற்காகவே
தொலைபேசியில் இணைந்தாயா :evil:
காதலனே கவனமாக
கேட்டுக்கொள் நான் சொல்வதை
காதலிக்கவும் ஓர் நேரமுண்டு
காதலும் எனக்கு முக்கியம்
கண்ணயர்வும் முக்கியம் எனக்கு
தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி
தொல்லை பண்ணியது போதும்
ஆழமான அன்பிருந்தால்
அனுப்பிவிடு தினம் ஒரு மடல்
இணையத்தின் ஊடாக
இல்லையேல்
உலகம் சுற்றும் வாலிபனே
உன்னால் முடியும் தானே
உதயமாக என் முன்னால்
:roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
(உதயமாவான்)
படிக்க என சென்ற என்னை
பிடிவாதமாக இடை மறித்து
காதல் செய் காதல் செய் என
காதோரம் பலமுறை சொன்னவனே
நான் ஞாயிற்றுக்கிழமைகளில்
நீண்டநேரம் எங்கிருப்பேன் என
நன்கு உணர்ந்த நல்லவனே
நாடோடி மன்னவனே
செல்லிட தொலைபேசி குறுந்தகவலை
செல்லமாக நீ எனக்கனுப்பி
குதுகலமாக படித்த என் மனதை
குலைத்தாயே ஒரு விநாடியில்
கணக்கியல் பாடமோ
கிறுக்கலானது எனக்கு
வர்த்தக பாடமும்
வெறுப்புக்குள்ளாக்கியது
பொருளியல் பாடமும்
பொலிவிழந்து போனது
கணித பாடமோ என்னை
கண்சிமிட்டி நையாண்டி பண்ணியது
எதற்காக அன்பே இப்படி
என்னை கோவப்படுத்துகின்றாய் :evil:
காதலனே காதலனே
காதலையும் அளவோடு
காதலிக்க பழகிக்கொள்
அளவுக்கு மீறினால் உனது
அன்புக் காதலும் நஞ்சாகிவிடும் :evil:
இது மட்டுமா
இன்னும் இருக்கு
அதையும் கேள் :!:
நிம்மதியாக உன் இனிய
நினைவுகளுடன் அமைதியாக
நித்திரை கொண்ட என்னை
சத்தமில்லாமல் இருந்த
அர்த்த சாமத்தில்
உனது தொலைபேசி சினுங்கலால்
எனது தூக்கத்தைக் கலைத்து
"நான் கண்ட இன்பம் எல்லாம்
நீ கொண்ட அன்பினால் தான் " என்று
இரவு வணக்கமும் கூறி
இன்முகத்துடன் விடைபெற்றாயே
தூக்கத்தில் இருந்த என்னை
தொல்லை பண்ணுவதற்காகவே
தொலைபேசியில் இணைந்தாயா :evil:
காதலனே கவனமாக
கேட்டுக்கொள் நான் சொல்வதை
காதலிக்கவும் ஓர் நேரமுண்டு
காதலும் எனக்கு முக்கியம்
கண்ணயர்வும் முக்கியம் எனக்கு
தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி
தொல்லை பண்ணியது போதும்
ஆழமான அன்பிருந்தால்
அனுப்பிவிடு தினம் ஒரு மடல்
இணையத்தின் ஊடாக
இல்லையேல்
உலகம் சுற்றும் வாலிபனே
உன்னால் முடியும் தானே
உதயமாக என் முன்னால்
:roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: (உதயமாவான்)
----------

