10-31-2003, 08:43 PM
kuruvikal Wrote:ஏன் பாருங்கோ அமெரிக்க சன நாய் அகத்தோட தான் மனிதன் வாழ் வேண்டுமென்று என்ன கடவுளா நியதி போட்டு அனுப்பினவர்...ஏன் அமெரிக்க சன நாய் அகத்தைவிட அதிக சுதந்திரம் வழங்கும் அரசியல் முறைமைகள் இல்லையோ...????! தினமும் உலகிலேயே கிரிமினல்கள் அட்டகாசம் பெருகும் நாடு அமெரிக்கா....அதை யாரங்கோ தடுக்கிறது...இதுதானோ அவர்களின் சன நாயகம்....ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று... மற்றவரின் வாழ்வுரிமையில் தலையிடாது.. வாழ்வதற்காக கொள்கை வகுக்க உலகில் இடமுண்டு...அதை சன நாய் அகத்தின் பெயரால் அமெரிக்கா தடுக்க முடியுமென்றால் ஏன் அதையே இந்தியா செய்ய முடியாது.... ரஷ்சியா செய்ய முடியாது...இப்படி ஒவ்வொருவரும் கிளம்பினால் நல்லாத்தான் வாழ்வான் மனிதன்...அதுதவிர ஈராக் மக்கள் கேட்டா சன நாயகம் காக்க போனீர்கள்...அணு ஆயுத பிடிக்கப்போய் இப்ப சன நாய் அகம் காப்பில முடிக்கிறியளோ...வாழ்க சன நாய் அகம்...!ஐயா குருவியாரே.. சதாமின் சன நாய் அகத்துக்கோ தலைபான் சன நாய் பெண் உரிமைத்தனத்துக்கோ வக்காலத்துவாங்க ஒரு தனித் திறமை வேண்டும் பாராட்டுக்கள். ஆரம்பத்தில் ஈராக்கபற்றி நான் எழுதிய கருத்துக்கள் உங்களுக்கு நினைவில்லையென்றால் ஒருமுறை திருப்பப் படித்துவந்து எழுதுங்கள். ஒப்பிட்டு எழுதிய எனக்கு படம் காண்பிக்க உங்களால் முடியாது. துருக்கி தவிர்ந்த ஏனைய நாடுகள்பற்றி அவற்றின் ஆட்சி முறைபற்றி என்ன எழுதினேனோ அதைத்தான் தற்போது வலியுறுத்தி எழுதியுள்ளேன். அமெரிக்கா ஜனநாயக நாடு. தேர்தல்முறையில் 100 சதவீதம் மக்களாட்சி நடைபெறும் நாடு. அதைத்தவிர வேறொன்றும் உதாரணத்துக்குத் தேவையில்லை. குவெய்துக்குள் ஊடுருவி அமெரிக்கர்களை கும்பம் வைத்து கூப்பிட்டது சதாமே தவிர வேறு யாருமல்ல.
எனது கணிப்பில் எது நடந்தாலும் தற்போது அமெரிக்கா வெளியேறாது. நீர் மின்சார விநியோகத்தை கட்டக்கட்ட உடைத்தெறிந்து அவர்களை மேலும் பலகாலம் இருக்க வழிசமைத்துக்கொடுக்கிறார்கள். ஈராக்கியர்களை ஈராக்கியர்களே கொன்று உள்நாட்டுக்கலவரத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். இவற்றால் மேலும் பாதிக்கப்படப்போவது அமெரிக்காவல்ல.. குருவியாரே.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

