10-31-2003, 07:58 PM
P.S.Seelan Wrote:நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன். என் மண்ணின் துன்ப துயரங்களில் பங்கெடுக்க முடியாத நிலையில். நானும் அன்று இருக்க வேண்டிய இடத்திலிருந்திருந்தால் என்னாலான பங்களிப்பினை செய்திருப்பேன். உங்களை அம்மா காதைப் பிடித்து அனுப்பினா என்னை எனது வேலையின்மை காலாலுதைத்து அனுப்பியது. வெளிநாட்டில் அகதிகளாயுள்ள அனைவரையும் நான் ஒரு தராசுத்தட்டில் வைக்கவில்லை. உங்களைப் போல் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபடித்து சேறுபுூசிக் கொண்டு திரியும் ஒரு ஒரு சிலரை மாத்திரமே வைகின்றேன்.உங்கள் தவறுகளுக்குப் பலம் சேர்க்க எல்லோரையும் உங்கள் சாக்கடையில் இழுக்காதீர்கள். அது எப்படி உமக்குத் தெரியும் எனது பிள்ளைகள் பத்திரமாய் இருக்கின்றார்களா? அல்லது.... வேண்டாம். உண்மைகளை ஒத்துக் கொள்ளுங்கள். தேவை கருதித்தான் அங்கே நிதி அறவிடுகின்றார்கள். அதை முதலில் உணருங்கள். விரும்பினால் கொடுத்துவிட்டு அந்த மண்ணிற்குப் போய் மகிழ்வுடன் வாருங்கள். அல்லது அகதியாகவே கோவணமின்றி வாழுங்கள்.ஐயா சீலன்.. நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு தழிழீழத்தை வார்த்தைக்கு வார்த்தை போற்றிக்கொண்டு எவ்வளவு நல்லவிடயங்கள் அங்கு நடக்கின்றன என்று கூறிக்கொண்டு உங்கு ஏன் இருக்கிறீர்கள். உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் வேலைக்காகவா கோவணமில்லாமல் உங்கு சென்றீர்கள்..?
நீங்கள் எழுதிய கருத்துக்களை ஒருமுறை இரைமீட்டுப்பாருங்கள்.. எத்தனைமுறை புலம்பெயர்ந்தவர்கள் அத்தனைபேரையும் சாடியுள்ளீர்கள்.. எத்தனைமுறை தூற்றியுள்ளீர்கள்.. எத்தனைமுறை மிரட்டியுள்ளீர்களென.. ஐயா உது உங்களுடன் வந்த பிறவிக்குணம்.. உங்கள் கருத்துடன் ஒத்துப்போகவில்லையென்றவுடன்.. கருத்துக்கு பதில் கருத்தே எழுதாமல் தூற்றுவதும்.. மிரட்டுவதும் அடிதடியில் இறங்குவதும்..பதில் கூறமுடியாக்கட்டத்தில் முடிப்பதும் நீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்யும் வளமையான வன்செயல். ஆரம்பக்கட்டத்தில் நேரடியாக பார்த்த அனுபவித்த காரணத்தால்த்தான் இவ்வளவுகாலமும் கருத்து எழுதினேன். கோவணமில்லாமல் சந்தியில் நின்றவர்களை எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் சொல்லுகிறேன்.. வன்முறையையே தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் காலப்போக்கில் காலஓட்டத்துக்குத் தக்கதாக பேச்சு கருத்து மாற்றி பலரையும் மூளைச்சலவை செய்துள்ளார்களே தவிர இதுவரை பெற்றவை எதுவுமில்லை. இருந்தவற்றை அழித்துள்ளார்களே தவிர எதையும் பெறவில்லை. பொதுமக்களை சுரண்டினார்கள் சுரண்டுகிறார்களே தவிர எதையும் கொடுக்கவில்லை.. கொடுக்கப்போவதுமில்லை. எனது பிள்ளைகளை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் பிள்ளையை போருக்கு அனுப்பும் குணம் எனக்கில்லை. அடுத்தன் பிள்ளையை மாவீரராக்கிவிட்டு எனது பிள்ளை வாழவேண்டும் என்று சொல்லும் குணம் எனக்கில்லை. அடுத்தவன் பிள்ளையை மாவீரராக்க எனது மனம் ஒருபொழுதும் இடம்கொடுக்காது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

