Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதைச் சொல்வது?? இந்து N.ராம்!!
#1
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை மண்டியிட வைத்துவிட்டனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து வரும் தமிழ்நாட்டின் 'இந்து' ஆங்கில நாளேட்டின் பிரதம ஆசிரியர் என். ராம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் 'சன் நியூஸ்' என்ற செய்தி தொலைக்காட்சியில் கதிர்காமர் கொலை தொடர்பாக இந்து ராமிடம் எழுத்தாளர் மாலன் நேர்காணல் செய்தார்.

இந்த நேர்காணலில் இந்து என்.ராம் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:

- கட்டுநாயக்க விமான தளத்தை தகர்த்த போதே விடுதலைப் புலிகள் தங்களது இராணுவ வலிமையை வெளிப்படுத்திவிட்டனர்.

- தங்களது இராணுவ வலிமை மூலம் சிங்களவர்களை விடுதலைப் புலிகள் மண்டியிட வைத்துள்ளனர். இனியொரு போருக்கு சிங்களவர்களும் தயாராக இல்லை. சிங்கள இராணுவமும் தயாராக இல்லை. சிங்கள இராணுவத்தில் 20 முதல் 30 சதவீதத்தினர் ஓடிப்போய்விட்டனர்.

- அரசியல் களத்தில் சந்திரிகாவும் ரணிலும் இணைந்து நின்றால் அவர்கள் அரசியல் பலம்தான் பெறுவார்கள். விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தின் முன் இந்த அரசியல் வலு பலமற்றதுதான்.

- ஆயுதப் போராட்டம் நடைபெறும் சூழலில் அனைவரும் அரசியல் வழி தீர்வுதான் சரியானது என்று கூறிவருகிறோம். ஆனால் உண்மையில் இராணுவ ரீதியான தீர்வுதான் ஏற்பட்டு வருகிறது. ஏற்படும்.

- சிறிலங்காவில் கொல்லப்பட்ட கதிர்காமர் போன்று குமாரி ஜெயவர்த்தனா, உய்யங்கொட போன்ற அறிவாளிகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றனர். ஆனால் இராணுவ ரீதியான போராட்டத்தில் இத்தகைய அறிவாளர்கள் பங்களிப்பு மிக மிகக் குறைவு.

- அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்காக போராடியவர் லக்ஸ்மன் கதிர்காமர். அவர் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர்

என்று கூறிய என்.ராம் வழமை போல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தேசியத் தலைவரையும் ஒருமையில் விமர்சிக்கவும் தவறவில்லை.

.............செய்தி: புதினத்திலிருந்து...........
" "
Reply


Messages In This Thread
இதைச் சொல்வது?? இந்து N.ராம்!! - by cannon - 08-28-2005, 08:45 PM
[No subject] - by Danklas - 08-28-2005, 08:51 PM
[No subject] - by cannon - 08-28-2005, 08:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)