Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈராக்கில் அமெரிக்க உலங்குவானூர்தி...
#14
. தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி என்ன? : ரமலான் மாதத்தில் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி!
வாஷிங்டன்: ஈராக்கில் தற்போது நடக்கும் குண்டுவீச்சுத் தாக்குதல் அமெரிக்காவை திணறடிக்கிறது. இன்று ஈராக்கில் 1.3 லட்சம் அமெரிக்க வீரர்கள் இருந்த போதும், தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவத் தலைவர்கள் தங்கியிருந்த ஓட்டல் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. இது அமெரிக்க அணுகுமுறைக் கோளாறா அல்லது திடீரென ஈராக்கில் சதாம் கை ஓங்கி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஈராக்கில் உள்ள சதாம் சொந்த ஊரான கிர்குக் நகரில் மட்டும் 2200 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள அமெரிக்க ராணுவ வீரர்களிடம் அதிக அளவு உற்சாகம் இல்லை என்றும், எத்தனை நாளைக்குத் தான் ஈராக் அமைதிக்காக தாங்கள் பலியாகப் போகிறோம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

திக்ரித் பகுதிகளில் என்ன தான் நிலைமை என்ற கேள்விக்கு, அமெரிக்க மேஜர் ஜெனரல் ரேமாண்ட் கூறுகையில், "இங்கு போரிடுபவர்களில் 95 சதவீதம் பேர் கொரில்லாக்கள். இவர்கள் சதாம் ஆதரவாளர்கள், மற்றவர்கள் வெளிநாட்டுக் கூலிகள்' என்று கூறினார். ஆனால், பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை குண்டுவீச்சில், 35 பேர் செத்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட மற்றொரு அமெரிக்க பிரிகேடியர் மார்க், "இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டினர். இதில் பிடிபட்ட ஒருவரிடம் சிரியா பாஸ்போர்ட் இருந்தது' என்கிறார்.

தீவிரவாதச் செயல்கள் குறித்த ஆய்வு நிபுணர் டேனியல் பெஞ்சமின் கூறும் போது, "சவுதி அரேபியா, ஏமன், சிரியா, எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் தீவிரவாதிகளே மோதலுக்குக் காரணம்' என்கிறார்.

அமெரிக்க ராணுவத் தலைமையோ, இம்மாதிரித் தாக்குதல் கண்டு அதிர்ந்து போய் இருக்கும் நிலையை ஏற்க மறுக்கிறது.

ஈராக்கில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொதுநல அமைப்புகள் தொடர்ந்து தங்கி ஈராக்கில் பணிபுரிய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவெல் கூறியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று பாக்தாத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தின் மீதான தாக்குதல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்குப் பதிலாக பாவெல், "நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த, பாதுகாப்பை ஏற்படுத்த நாம் உதவ வேண்டும்,' என்றிருக்கிறார்.

ஈராக்கில் அமைதி ஆட்சி அமைக்க முயலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முயற்சிகளுக்கு தற்போது அதிக எதிர்ப்பு ரமலான் மாதத்தில் வந்திருப்பது பெரும் பிரச்னைகளை எழுப்பியுள்ளது.

அரபு முஸ்லிம்கள் கோபம்!: கெய்ரோ: ரமலான் மாதத் துவக்க நாளன்றே பாக்தாத்தில் நடைபெற்ற ரத்தக்களரிக்கு அமெரிக்கச் செயல்கள் தான் காரணம் என்று அரபு முஸ்லிம்கள் கூறுகின்றனர். சதாம் போன்ற தலைவர் இல்லை. அதனால் திருடர்களும் தில்லுமுல்லு கோஷ்டிகளும் தலைதுõக்கி மோதல்களைத் துவக்கி உள்ளன. ஈராக்கில் அமைதி காக்க வேண்டிய அமெரிக்க ராணுவம் இந்த அளவு ரத்தம் சிந்தும் போது என்ன செய்தது? என்று ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வெளிவரும் "அல்கலீஜ்' கேள்வி எழுப்பியிருக்கிறது. "இதே நிலை நீடித்தால் அமெரிக்கர்களை பழிவாங்க நினைக்கும் தீவிரவாதிகள் களமாக ஈராக் மாறும்,' என்று ஏமனைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மின்சாரம் எங்கே? தண்ணீர் எங்கே? : பாக்தாத்: ரமலான் துவக்க நாளில் இருந்தே பாக்தாத் மட்டுமல்ல, பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நடக்கிறது. அமெரிக்கா நடத்தும் நிர்வாகம் ஈராக்கியர்களுக்குப் பிடிக்காதது தான் இதற்குக் காரணம் ஆகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து மாலை நேரத்திற்குப் பின் உணவு உண்பது முஸ்லிம்கள் வழக்கம். மேலும், அதிகாலை மற்றும் மதிய நேரங்களில் நடக்கும் தொழுகைக்கு வசதியாக மின்சாரம் இல்லை. பல இடங்களில் குண்டுவீச்சும் சேதமும் இருப்பதால், முழு அளவில் மின் வினியோகமோ அல்லது தண்ணீர் வசதியோ இல்லை. இதை முஸ்லிம் தலைவர்கள் சுட்டிக் காட்டியதால் மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இம்மாதத்தில் அமெரிக்க வீரர்கள் தங்கள் இஷ்டப்படி பொது இடங்களில் சாப்பிடுவதையும், அதே போல எல்லா இடங்களிலும் புகை பிடிப்பதும் கூட முஸ்லிம்கள் மனதை நோகடித்துள்ளன. இதனால் ராணுவ வீரர்கள் மறைவிடங்களில் புகை பிடிக்கவும், பகல் நேரத்தில் வெளி இடங்களில் சாப்பிடாமலும் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-27-2003, 11:17 PM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 08:37 AM
[No subject] - by yarl - 10-28-2003, 08:59 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 09:25 AM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 10:09 AM
[No subject] - by Kanani - 10-28-2003, 11:53 AM
[No subject] - by kuruvikal - 10-28-2003, 12:35 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 05:07 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 07:58 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 08:17 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 08:26 AM
[No subject] - by kuruvikal - 10-30-2003, 01:03 PM
[No subject] - by சாமி - 10-30-2003, 04:35 PM
[No subject] - by Mathivathanan - 10-31-2003, 08:43 PM
[No subject] - by kuruvikal - 11-02-2003, 10:25 AM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 11:00 AM
[No subject] - by vasisutha - 11-03-2003, 07:15 AM
[No subject] - by Paranee - 11-03-2003, 01:17 PM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 08:46 AM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 08:57 AM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:43 PM
[No subject] - by kuruvikal - 11-12-2003, 04:45 PM
[No subject] - by yarlmohan - 11-14-2003, 04:44 PM
[No subject] - by kuruvikal - 11-14-2003, 07:40 PM
[No subject] - by kuruvikal - 11-15-2003, 08:43 PM
[No subject] - by Mathivathanan - 11-15-2003, 10:44 PM
[No subject] - by தணிக்கை - 11-16-2003, 04:05 PM
[No subject] - by kuruvikal - 11-16-2003, 07:37 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 03:50 PM
[No subject] - by mohamed - 01-13-2004, 12:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)