10-30-2003, 12:54 PM
நிச்சயமாய் இங்கே கோவனமில்லாமல் அவமானத்துடன் தான் வாழ்கின்றேன். என் மண்ணின் துன்ப துயரங்களில் பங்கெடுக்க முடியாத நிலையில். நானும் அன்று இருக்க வேண்டிய இடத்திலிருந்திருந்தால் என்னாலான பங்களிப்பினை செய்திருப்பேன். உங்களை அம்மா காதைப் பிடித்து அனுப்பினா என்னை எனது வேலையின்மை காலாலுதைத்து அனுப்பியது. வெளிநாட்டில் அகதிகளாயுள்ள அனைவரையும் நான் ஒரு தராசுத்தட்டில் வைக்கவில்லை. உங்களைப் போல் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபடித்து சேறுபுூசிக் கொண்டு திரியும் ஒரு ஒரு சிலரை மாத்திரமே வைகின்றேன்.உங்கள் தவறுகளுக்குப் பலம் சேர்க்க எல்லோரையும் உங்கள் சாக்கடையில் இழுக்காதீர்கள். அது எப்படி உமக்குத் தெரியும் எனது பிள்ளைகள் பத்திரமாய் இருக்கின்றார்களா? அல்லது.... வேண்டாம். உண்மைகளை ஒத்துக் கொள்ளுங்கள். தேவை கருதித்தான் அங்கே நிதி அறவிடுகின்றார்கள். அதை முதலில் உணருங்கள். விரும்பினால் கொடுத்துவிட்டு அந்த மண்ணிற்குப் போய் மகிழ்வுடன் வாருங்கள். அல்லது அகதியாகவே கோவணமின்றி வாழுங்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

