10-30-2003, 10:33 AM
யாழ்/yarl Wrote:முந்தைய சாதனையைவிட கிட்டத்தட்ட 8 மணித்தியாலங்கள் அதிகமாகவே இருந்து சாதனையை
இன்று விடிகாலை2 மணியளவில் முடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
வானொலித்துறையில் ஈழத்தவர் செய்யும் சாதனை புதிதல்ல.சிவபாதசுந்தரத்திலிருந்து
மயில்வாகனம் ஈறாக பலர் அண்டைய நாடுகள் பாராட்டும வண்ணம் புகழ் பெற்றுள்ளார்கள.
இது சர்வதேச வானொலியளவில்
புகழ்பெற்ற ஓர் சாதனை நிகழ்வு.அதுவும் ஓர் தமிழச்சியால நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.சாதனை
இந்த சாதனையை கின்னஸ் அமைபபு தனது ஏட்டில் பதிய எமது வாழ்த்துக்கள்.
<span style='color:green'>சாதனையாளர் <b>சிவாந்தி</b>யின் சாதனைக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துகள்.இவரது நெஞ்சுரமும், திடமும் கண்டு மகிழ்கிறோம்...................
[u]இவரது சாதனைக்கு உறுதுணை நின்ற ETBC கலையக உறவுகளுக்கும், வாழ்த்துகளும் , நன்றிகளும்.
வான் அலைகளில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் , பல தமிழ் ஊடகங்களும்,தொலைக் காட்சிகளும் சேர்ந்து இருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. இதுபோல் அனைவரும் நல்லெண்ணத்துடன் ஒன்று சேருவதற்கு சிவாந்தி போன்றோரது சாதனைகள் உந்து சக்தியாக விளங்கும்.
சிவாந்தியின் சாதனையை வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றிகள்.
இது ஒரு சிவாந்தியின் வெற்றியல்ல.உலகெங்கும் வாழும் தமிழ் சமூகத்தை பெருமைப்பட வைத்த வெற்றியாகும்.
ஆழிக்குமரன் ஆனந்தன் பாக்கு நீரிணையைக் கடந்து வந்த போது இலங்கை கின்னஸில் முதல் முறையாக இடம் பிடித்தது.
இன்று <b>சிவாந்தி</b> ,ஒரு வானலைக்குமரியாக வார்த்தைகளால் வானத்தை கடந்து கின்னஸ் சாதனை புரிந்து நிற்கிறாள் ...............
<b>வாழ்த்துகள் சிவாந்தி</b>.................</span>
அன்புடன்,
அஜீவன்

