Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிந்தவுூர் அரிசி ஆலை நீராவி கொள்கலன் வெடித்து சிதறியது??
#1
நிந்தவுூர் அரிசி ஆலை நீராவி கொள்கலன் வெடித்துச் சிதறியதில்???????
இருவர் பலி, நால்வர் படுகாயம்.

நிந்தவுூர் 22ம் பிரிவு பிர தான வீதியிலுள்ள தனியார் அரிசி ஆலை ஒன்றில் நெல் அவிப்ப தற்கென நீர் கொதிக்க வைக்கும் ஸ்hPம் பொயிலர் வெடித்துச் சிதறி ஏற்பட்ட அனர்த்தத்தில் அந்த அரிசி ஆலையில் கூலித் தொழில் செய்த தொழிலாளி ஒருவரும், அவரது ஆறுமாத பெண்குழுந்தையும் இறந் ததுடன், மேலும் நான்கு தொழி லாளர்கள் படுகாயங்களுக்குள் ளாகி (எரிகாயங்கள்) வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கி ழமை நிந்தவுூரை பெரும் பரபரப்பி லாழ்த்திய இந்த அனர்த்தத்தில் தொழிலாளியான மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்த இ.சாந்தகு மார் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையும், அவரது ஆறுமாத குழந்தையான தர்சிகா எனும் பெண் குழந்தையுமே இறந்துள் ளனர்.

நேற்றுக்காலை 8.15 மணி யளவில் இடம்பெற்ற இந்த ஸ்hPம் பொயிலர் வெடிப்புச் சம்பவத்தை யடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாள ர்கள் காரைதீவு விசேட அதிரடிப் படையினராலும், பொதுமக்களா லும் நிந்தவுூர் மாவட்ட வைத்திய சாலைக்கு உடனடியாக விரைந்து கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு வைத்திய அதிகா ரிகளான டாக்டர் ஹபீலுல் இலா ஹி, டாக்டர் எம்.எம்.எம்.றிசா ஆகி யோரும் வைத்தியசாலை தாதியர் களும், ஊழியர்களும் பெரும் பிரய த்தனங்களுடன் சிகிச்சை அளி ப்பதில் ஈடுபட்டுப் பெரும்சேவை யாற்றினர்.

அனர்த்தத்தில் படுகாயங் களுக்குள்ளான அரிசி ஆலைத் தொழிலாளர்களான என்.நிமலன், (சித்தாண்டி,மாவடிவேம்பு), புண்ணி மூத்தி (கரவெட்டி, நாவற்காடு), குமரகுரு ( உன்னிச்சை), எம்.ந வாஸ் (நிந்தவுூர்) ஆகியோருக்கு நிந்தவுூர் மாவட்ட வைத்தியசா லையில் ஆரம்ப சிகிச்சைகள் அளி க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச் சைக்காக அம்பாறை பொது வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப் பட்டுள்ள தொழிலாளர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இந்த அனர்த்த த்தில் உயிரிழந்த தொழிலாளி சாந் தகுமாரவினதும், அவரது குழந்தை தர்சிகாவினதும் சடலங்கள் நிந்தவுூர் மாவட்ட வைத்தியசாலை யில் வைக்கப்பட்டிருந்ததுடன் மரண விசாரணைக்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டிருந்தன.

குறித்த அரிசி ஆலையின் ஸ்hPம் பொயிலர் பொருத்தப்பட்டி ருந்த கட்டிடப் பகுதியும், அருகி லுள்ள சுவர்களும் இடிந்து நொறு ங்கிக் காணப்பட்டதுடன், அதன் ஒரு பகுதி வெகு து}ரத்திலும் வீசப் பட்டுக் காணப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசார ணைகளை மேற்கொண்டனர்.

இறந்த தன் குழந்தைக்குப் பால் வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில், கணவரிடம் பணம் பெறவே தான் குழந்தை யுடன் மேற்படி நிந்தவுூர் அரிசி ஆலைக்கு மட்டக்களப்பு கரவெட்டி யிலிருந்து வந்ததாகவும், வந்த இடத்தில் கணவனையும், குழந்தை யையும் இழக்க வேண்டிய நிலை வந்துவிட்டதாகவும் இறந்த சாந்த குமாரின் மனைவி அழுது புலம்பிய வாறு தெரிவித்தார்.
Truth 'll prevail
Reply


Messages In This Thread
நிந்தவுூர் அரிசி ஆலை ந - by Mathivathanan - 10-30-2003, 12:20 AM
[No subject] - by P.S.Seelan - 10-30-2003, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)