08-28-2005, 07:06 AM
stalin Wrote:உராய்வு புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடை பெற்றது..வசி,சுதா மதன் வந்திருந்தார்கள்... கிருபனும் குறுந்தாடியுடன் வந்தார் என்று கேள்வி... இளைஞனை தவிர வேற கள உறவுகள் அவரை சந்திக்கவில்லை ..
இளைஞனை தாசீசியஸ் மாஸ்ரர் உரிமையோடு கவிதையை பாடச் செய்ததும், அவரும் கீழ்ப்படிவுள்ள மாணவன் போன்று கவிதைகளைப் பாடிக் காட்டியதும் நிகழ்ச்சிக்குக் கலகலப்பூட்டியது.
எதிர்பார்த்த பலர் பாராட்ட வரவில்லை என்ற ஆதங்கமும் பலரின் பேச்சில் தொனித்தது. எனினும் இளைஞனின் கவிதைகளைப் படிப்பதற்கு விமர்சகர்களின் பரிந்துரைப்பு தேவையில்லை என்றே எண்ணுகின்றேன்.
உலக நாணயங்களையும், பணத்தாள்களையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அன்ரன் யோசேப்பின் கடின உழைப்பிற்குப் பாராட்டுக்கள்.
எட்டு மணிக்கு வேறோர் இடத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் இறுதி வரை நிற்க முடியவில்லை. அதனால் யாழ்கள உறவுகளுடன் பேச முடியவில்லை. இன்னோர் விழாவில் கட்டாயம் சந்திப்போம்.
<b> . .</b>

