10-29-2003, 08:39 PM
சிவாந்தி தன் சாதனையைத் தொடர்ந்து சாதித்து முடிக்க அவருக்கு ஆதரவு கொடுத்த வானொலியின் இயக்குனர்களைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். சாதிக்கும் கனவுகளோடு எத்தனையோ இளையவர்கள் ஐரோப்பிய ஊடகங்களுக்குள் தங்கள் பொருளாதாரத்தைக்கூட இழந்து போனார்கள். இழந்தார்கள். ஆனால் அவர்களை ஊடகம் என்ற நிறுவனம் தனது தேவைகள் முடிந்ததும் உதறிவிட்டது. உளக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால் ஒரு சாதனைக்கு தங்கள் ஊடகத்தைக் கொடுத்து அந்த சாதனையாளரையும் ஊக்குவித்த பெருமை ஈரிபீசியினரைத்தான் சாரும். சிவாந்தி என்கின்ற பெண்ணுக்குத் தளம்கொடுத்த தமிழ் ஊடகம் எம்மவரது ஊடகங்கள் அனைத்துக்கும் உதாரணமாக தனது பரந்த நோக்கைத் வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும் வரட்டுக்கௌரவம் இடம் கொடுக்காமல் இன்னும் அந்தச்சாதனைப் பெண்ணை வாழ்த்தாது வாய்மூடியிருக்கும் ஊடகத்தின் ஆணவம் வேதனைக்குரிய விடயமே.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

