08-27-2005, 06:10 PM
<b>சென்னையில் வியாழனன்று நடிகர் பிரசாந்த் திருமணம்
தேனிலவைக் கழிக்க இலங்கை வருகிறார்</b>
<img src='http://www.indiafilm.com/prasanth.jpg' border='0' alt='user posted image'>
பிரபல திரைப்பட நடிகர் பிரஷாந்துக்கு எதிர்வரும் முதலாம் திகதி திருமணம் நடைபெறுகிறது.சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான வி.எஸ். தனசேகர்இ சிவகாம சுந்தரி ஆகியோரின் புதல்வியான கிரஹலக்ஷ்மியை இவர் திருமணம் செய்கிறார்.
சென்னை எம்.ஆர். நகர் மேயர் ஸ்ரீராமநாதன் செட்டியார் சென்டரில் காலை 7.45 முதல் 9.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் இத் திருமணம் இடம்பெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெறுகிறது.
பிரபல நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் தியாகராஜன் சாந்தி தம்பதிகளின் புதல்வனாகிய பிரஷாந்த். "வைகாசி பொறந்தாச்சி' திரைப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். முன்னணி கதாநாயகிகளுடன் 50 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர். உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஷங்கர் இயக்கி டெனிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தயாரித்த "ஜீன்ஸ்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
சினேகா முதல் முதலாக பிரஷாந்துடன் அறிமுகமான "விரும்புகிறேன்' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது. பிரஷாந்த் தற்போது பொலிஸ்இ டெக்சி டிரைவர்இ தகப்பன் சாமிஇ அடைக்கலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஷாந்தின் திருமணத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என தெரிகிறது. திருமணத்திற்குப் பின் "தகப்பன் சாமி' படத்தை முடித்துவிட்டுத்தான் தேனிலவைக் கழிக்க இலங்கை வருகிறார் பிரஷாந்த்.
-Veerakesari