Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வயது ஆவதை தடுக்கபுதிய சிகிச்சை
#1
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் 10 ஆராய்ச்சியாளர்கள் முதுமையை தடுக்கவும் மனிதனின் ஆயுளை அதிகரிக்கவும் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டனர். 10 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆய்வுக்குழுவில் 2 பேர் இந்தியர்கள்.

ஒருவர் பெயர் அனிமேஷ் நந்தி. இன்னொருவர் பெயர் பிரேம்குர்மானி.

இந்த குழுவினர் மேற்கண்ட ஆய்வில் முதல் கட்டமாக எலிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள். இதில் `குளோதோ' என்ற புதிய புரோட்டீனை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த புரோட்டீன் எலிகளின் செல்களில் ஹார்மோனாகவும் செயல்பட வைத்தனர்.

இந்த ஹார்மோன் ரத்த அணுக்களில் நல்ல முறையில் செயல்பட்டன.

இந்த சோதனையில் புதிய ஹார்மோன் செலுத்தப்பட்ட எலிகள் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தன. வழக்கமாக எலிகள் 2 ஆண்டுகள் வரை உயிர் வாழும். அவற்றின் ஆயுள் மேலும் ஒரு ஆண்டு நீடித்தது.

இதே சோதனை அடிப்படையில் மனிதர்களின் ஆயுளையும் நீடிக்க முடியும் என்று அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதுமை அடைவதை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட முடியும், ஆயுளையும் நீட்டிக்க முடியும்.

ஆரம்பத்தில் மனிதர்களின் எலும்புகள், மூளை இவற்றின் செல்களை நீண்ட நாட்களுக்கு தளர்ச்சி அடையாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
வயது ஆவதை தடுக்கபுதிய சிகிச்சை - by SUNDHAL - 08-27-2005, 04:44 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 04:48 PM
[No subject] - by SUNDHAL - 08-27-2005, 05:28 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 05:32 PM
[No subject] - by கீதா - 08-27-2005, 07:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)