10-29-2003, 01:44 PM
வீரா அவர்களே எங்கள் கருத்தில் எந்தச் திசைமாற்றமும் கிடையாது....முதலில் எளிமையாக சொன்னதை பின் சற்று விளக்கமாக வலியுறுத்திச் சொன்னோம்....சிவாந்தி என்பவரின் சாதனையை இப்போ ஒரு பழைய விடயத்துடன் தொடர்புபடுத்தி புலத்தில் வாழும் புலி ஆதரவு.. எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குள் கொண்டு சென்று அந்தச் சாதனையாளருக்கும் அதே சாயத்தை பூசி சாதனையை மலினப்படுத்துவது உங்களுக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது...இந்த விடயத்தில் தணிக்கை மற்றும் தாங்கள் அதிதீவிரமாக கருத்தாட முற்பட்ட விதமே எமக்கு இப்படியான ஒரு சந்தேகத்தைத் தோற்றுவித்தது அது இப்போ உண்மையாகக் கூடத்தெரிகிறது...இப்படியான பிரச்சாரங்களை எவர் செய்வதும் அது குறிப்பிட்ட சாதனையாளரையும் அவருடைய முயற்சியையுமே மலினப்படுத்தும் என்பதை மறந்துவிட வேண்டாம்...சாதனைக்கு முன்னால் புலி சார்பு எதிர்ப்பு என்பது அவசியமற்றது....அதை கின்னஸும் எதிர்பார்க்கவில்லை...புலத்து ஈழத்தமிழர்கள் முதலில் இந்த அரசியல் விரோத மனநிலையை, எங்கும் புகுத்தி பிரச்சாரம் செய்வதை எதிர்காலத்திலாவது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் கருதி தவிர்ப்பார்களா....?!!
:twisted: :roll: :twisted:
:twisted: :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

