10-29-2003, 09:41 AM
Kanakkayanaar Wrote:அதோடு அந்த ஆளேற்றியினுள் () நிகழ்ந்த கலந்துரையாடலின் தேவை என்ன? காட்டினுள் வந்த காட்சியில், அந்த அகதிகளின் ஓலம் சற்று பிசகப் பின்னப்பட்டது போல் தெரிகிறது. சற்று இரைச்சல்களைக் குறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.நன்றி கனகராயன் அவர்களே,
எச்சில் போர்வை ஒரு பரீட்சார்த்த படைப்பாகவே செய்தேன்.இக் குறும்படம் சுமார் 4 மணி நேரத்துக்குள் தீர்மானிக்கப் பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டது.இது பற்றிய தகவலை பின்னர் தருகிறேன்................
எனவே ஒலியமைப்பைக் கையாளும் போது அதிக கவனம் என்னால் செலுத்தப்படவில்லை என்பது உண்மையே.
எனவே நீங்கள் சொல்வதை விட குறைகள் எனக்கு இருக்கிறது, தெரிகிறது.
காரணம் காடுகளில் எடுக்கப்பட்ட பகுதிகளை நானும் எச்சில் போர்வை கதாநாயகனும் (என்னுடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளர் லுயிஸ்) மட்டுமே சென்று ஒளிப்பதிவு செய்தோம்.
பின்னர் வீட்டுக்குள் எடுத்த பகுதியில் ஒளிப்பதிவாளர் நோயெல் இருந்தார். சும்மா.................ஒருவித எதிர்பார்ப்புமில்லாமல் எடுத்த குறும்படம் எச்சில்போர்வை.
பிரான்சில் நடைபெற்ற குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படமாக தேர்வான போது அதிர்ந்து போனோம்.
தவிர தமிழர்கள் சுவிசில் 20வருடங்கள் என்ற இந்நாட்டு மக்கள் ஒழுங்கு செய்த ஒரு நிகழ்வில் அவர்களது பாராட்டைப் பெற்றது.
அன்புடன்,
அஜீவன்

