08-27-2005, 01:12 PM
KULAKADDAN Wrote:<img src='http://img392.imageshack.us/img392/1130/paalai2ys.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img392.imageshack.us/img392/4403/paalai28ws.jpg' border='0' alt='user posted image'>
பாலை மரம் பாலைப்பழம் யாருக்கேனும் ஞாபகம் இருக்கொ.
சின்ன வயத்தில் இருந்து பாலை பழம் சாப்பிடுவதென்றால் நல்ல விருப்பம். வழமையாக யூலை ஆரம்பம் வரை கிடைக்ககூடியதாக இருக்கிற பாலைப்பழம் ஏனோ இம்முறை கிடைக்கவில்லை. பாலை மரத்தை மட்டும் தான் சுட முடிந்தது,
சிறிய மஞ்சள் நிறமான பழம், நல்ல இனிப்பு சுவையுள்ளது. ஆனால் அதில் உள்ள பால் சொண்டில்/உதட்டில் ஒட்டும் என்பதால் சிலர் தேங்காய் எண்ணெய் தடவி கொள்வர். என்ன அதிகம் சாப்பிட்டல் அதிகம் தாகம் எடுக்கும் என்பார்கள்.
இதில் இருந்து பாலைபழப்பாணி தயாரிப்பார்கள். பாணுக்கு பூசி சாப்பிட நல்லா இருக்கும். அத விட பாலைபழ வத்தல் போடுவார்கள்.
நான் பாலைமரத்தில் ஏறிஇருந்து கொட்டன் கொட்டன் பழங்கலைத்தான் முதலில் பிடிங்கி சாப்புடுவேன் என்ன இனிமையானது ? பாலைப்பழ வற்றல் அதவிட சுவை :wink:

