10-29-2003, 05:25 AM
எனக்கு கலைகளைச் சுவைக்கவே தெரியும் (அதுவும் நுணுக்கமின்றியே ) :mrgreen: . ஒரு பார்வையாளன் என்ற கோணத்தில், 'எச்சிற் போர்வை' என்ற அயீவன் அவர்களின் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தலை நடிகர் பேசாமலே ஒரு அகதியின் அவலங்களை படமே முழுமையாச் சொல்லியது. தொலைபேசியில் பேசியவர் சற்றுத் தெளிவாகவும், கோயில் மணி அடிக்கும் போழ்து அது மட்டும் தெளிவாக இருந்திருந்தால் (பின்னணி இரைச்சலின்றி)மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
அதோடு அந்த ஆளேற்றியினுள் () நிகழ்ந்த கலந்துரையாடலின் தேவை என்ன? காட்டினுள் வந்த காட்சியில், அந்த அகதிகளின் ஓலம் சற்று பிசகப் பின்னப்பட்டது போல் தெரிகிறது. சற்று இரைச்சல்களைக் குறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மற்றும் படி அந்தது துப்பாக்கிச் சூட்டொல்லிகள் அவரின் கடந்த கால அவல நிலைகளை மீட்டிருக்கின்றன. தலைப்பாத்திரந்டின் வேதனைகளை பார்வையாளர்கள் நன்கு உணரும் படி இருந்தந்து. அயீவன், இளங்கோ, யாழ் இணையப் பொறுப்பாளர்கள் யாவர்க்கும் மிக்க நன்றி.
பி.கு.: காலம் நீட்டித்தலால் காலம் தாழ்த்தி நன்றி நவின்றமைக்கு எனது வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.

-