08-27-2005, 12:58 AM
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்த கட்சிகளின் கருத்துகள்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்தியாக வேண்டும் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு கூறியிருக்கும் அதே வேளையில் ஏனைய எதிர்க்கட்சிகளும் அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளன.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடையும் என்றும், இதனால் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, 22 டிசம்பர் 1999ம் ஆண்டு பதவியேற்ற இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் குறிப்பிட்ட தேதியில் இருந்து ஆறு ஆண்டு காலத்தில் முடிவடையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்றைய தீர்ப்பில் கூறினார்.
இந்த வழக்கை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.
<b><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40013000/jpg/_40013883_swearafp.jpg' border='0' alt='user posted image'></b>
<b>ஜனாதிபதியும் பிரதமர் மஹிந்த ராஜபட்சவும் </b>
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக முதன்முறை டிசம்பர் 1994 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து வெற்றி பெற்றார்.
எனவே, அவருடைய இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் டிசம்பர் 2007ல்தான் முடிவடையும் என அவர் தரப்பில் வாதாடப்பட்டது.
ஆனால், இலங்கை எதிர்க்கட்சிகளோ அவர் 1999ம் ஆண்டு பதவியேற்றதால் இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டன, போராட்டங்களும் நடத்தின.
இன்றைய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியாகவும், சந்திரிகா குமாரதுங்கவிற்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
இன்றைய தீர்ப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தாம் ஏற்று நடப்பதுடன், அதற்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவோம் என்று இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் அதனை வரவேற்றுள்ளார்.
இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறுகிறார் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40004000/jpg/_40004417_ranil_ap203ix.jpg' border='0' alt='user posted image'>
<b>ரனில் விக்ரமசிங்க</b>
தேர்தல் இந்த வருடத்துக்குள் நடக்கும் என்ற ஒரு முடிவு வந்துள்ளது என்பதைத் தவிர இந்தத் தீர்ப்பில் தமக்கு பெரிய விசேசம் எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர்.
தீர்ப்பை வரவேற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், யாருக்கு ஆதரவு என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறார்.
இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்க முடியாது.
இலங்கையின் ஆளும் கட்சியின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபட்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>