Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிர்ஸ்டம்!
#1
புத்தி அண்ணனுக்காக இப்பாடல் ஒலிபரப்பப்படுகின்றது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதிர்ஸ்டம்!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -

தூங்காதே தம்பி
தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே!
(தூங்....)
நீ - தாங்கிய உடையும்
ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும்
சிறைக்கதவும்,
சக்தியிருந்தால்
உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு
இடம் கொடுக்கும் (தூங்.....)
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார், சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஸ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார் - உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்! (தூங்....)
போர்ப் படைதனில் தூங்கியவன்
வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன்
கல்வியிழந்தான்!
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின்
தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா! (தூங்....)
(நாடோடி மன்னன் - 1958)

நன்றி: முழக்கம்.com
[i][b]
!
Reply


Messages In This Thread
அதிர்ஸ்டம்! - by சாமி - 10-28-2003, 08:36 PM
[No subject] - by aathipan - 11-08-2003, 05:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)