08-26-2005, 06:38 PM
<b>ஆபுத்திரன் நாட்டை அடைந்த காதை.</b>
உதயகுமாரன் கொலையுண்டான் என்ற செய்தி கேட்ட சித்திராபதிக்கு பெரும் வேதனையை அளித்தது. அவன் மூலம் அவள் பெற எண்ணியிருந்தவைகள் வீணாகி விட்டனவே என்று அவள் எண்ணி வருந்தினாள். மேலும் உதயகுமாரன் இறப்பையோட்டி மணிமேகலையை சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதையறிந்து அரசியிடம் பேசிப்பார்க்கலம் என்று அங்கு வந்தாள். மணிமேகலையைச்சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்த மாதவி பெரிதும் வருந்தி தனது தோழியான சுதமதியுடன் அறவணடிகளை சென்று பணிந்தாள். பின்னர் அறவணடிகள் அரசியைக் காணப்புறப்பட்டனர். அவ்ருடன் மாதவி சுதமதி ஆகியோரும் அங்கு சென்றனர்.
அறவணடிகளைக் கண்ட அரசி அவரை தொழுது வரவேற்றாள் உரிய ஆசனத்தில் அமரச் செய்து அவரது வருகையால் மளிகை சிறப்புற்றது எனக் கூறினாள். அறவணடிகள் அவ்ர்களுக்கு அறிவுரைகள் கூறினார். மறுபிறப்பு பற்றி நன்குணர்ந்த மணுமேகலையே நீ மற்ற சமயக் கொள்கைகளை முதலில் அறிந்து வரவும். பின்னர் நான் உனக்கு புத்த மதக் கொள்கைகளை போதிப்பேன் என்று கூறிப் புறப்படலானர். அவர் எழக் கண்டதும். அவரை வணங்கி நான் ஆபுத்திரன் நாட்டிற்குச் செல்லப் போகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அருந்தவ முனிவர் சொன்னபடி நடந்து வாருங்கள். நான் இந்த நகரத்தில் இருந்த்தால் உதயகுமாரனைக் கொன்றது நான் தான் எனக் குறை கூறுவார்கள். எனவே நான் புத்த பீடிகையை வணங்கி வஞ்சி மாநகரை அடைந்து அங்கேயுள்ள கற்புக்கரசி கண்ணகி கோட்டத்தை வணங்கி நல்லறங்களை முடிந்தவரை செய்வேன். என்னைப்பற்றி யாரும் இனிக் கவலைப் பட வேண்டியதில்லை என்று கூறியவளய் அந்திப் பொழுதில் வான் வழியே புறப்பட்டுச் சென்றாள். அறவணடிகள் தம் தவப் பள்ளியை அடைந்தார்.
மணிமேகலை இந்திரனின் வழித் தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புற சோலைக்கு சென்று அங்குள்ள தரும்சாவகன் அடிகளை வணங்லி அவன் மூலம் அங்குள்ள அரசன் பெயரை அறிந்தாள். மழைவளம் சிறந்த இடம் என்று அறிந்து மகிழ்வடைந்தாள். எல்லாவளங்களும் அங்கே குறைவறக் கிடைப்பதை கண்டு நிறைவு கொண்டாள்.

<b> .. .. !!</b>