Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலமாரி...........
#1
ஆசிரியர் மாணவர்களிடம், இயேசுநாதர் தண்ணீரை மதுவாக மாற்றிய அற்புதம் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். பக்கம் பக்கமாக நீண்ட நேரம் எழுதித் தள்ளியவர்களுக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஒன்றுமே எழுதாமல் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இருந்து விட்டு, கடைசி யில் ஒரேயொரு வரி மட்டும் எழுதிய மாண வன் முதல் பரிசைத் தட்டிச் சென்றhன். அச்சிறுவன் யார் தெரியுமா? பின்னாட்களில் உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன்தான் அவர். அவருக்கு பரிசு வாங்கித் தந்த அந்த வரி இதுதான்.
"தண்ணீர் தனது எஜமானனைக் கண்டு வெட்கி, நாணி முகம் சிவந்தது".



ஒரு சமயம் அறிஞர் பிளேட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார். ……என் மகனுக்குக் கல்வி கற்றுத்தர எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?†† என்று கேட்டார்.
……ஐந்நு}று வெள்ளிக்காசுகள்†† என்றhர் பிளேட்டோ.
……என் மகனுக்குக் கல்வி கற் றுத்தர ஐந்நு}று வெள்ளிக்காசா இதைவிடக் குறைந்த செலவில் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே†† என்று கேட்டாராம் அந்த செல்வந்தர். உடனே பிளேட்டோ, ……நீங்கள் சொல்வது சரிதான். இந்தத் தொகைக்கு ஓர் அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி ஒரு அடிமையை நீங்கள் விலைக்கு வாங் கிக் கொண்டால் உங்கள் மகனையும் சேர்த்து உங்கள் வீட்டில் இரண்டு அடிமைகள் இருப் பார்கள்†† என்றhர். செல்வந்தர் முகத்தில் ஈயாடவில்லை



சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள லால்பகதூர் சாஸ்திரியும், கோவிந்த வல்லப பந்தும் ஒரு ஜPப்பில் சென்று கொண்டிருந் தனர். பந்த் பருத்த உடம்பை உடையவர். சாஸ்திரி மிகவும் மெலிந்த உடல்வாகு உடையவர். அவர்கள் பயணம் செய்த ஜPப் விபத்துக்குள்ளாகிக் கவிழ்;ந்து விட்டது. பந்த்தும் சாஸ்திரியும் தூக்கி எறியப்பட்டனர். பந்த் கீழே விழ அவர் மேல் சாஸ்திரி விழுந்தார்.

அதனைக் கேள்விப்பட்ட நேரு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வர்களைப் பார்த்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி னார். பின்னர் அவர்களிடம் ……இந்த விபத்து தொடர் பாக சாஸ்திரி அவர்களின் சார்பில் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் என்று கூறினார். எதற்காக? என்றhர் லால்பகதூர் சாஸ்திரி. நீங்கள் முதலில் கீழே விழுந்து, உங்கள் மீது பந்த் விழுந்திருந்தால் உங்கள் உடம்பு என்னகதி ஆகியிருக்கும்? என்று நேரு கூறி வேடிக்கை யாகச் சிரித்தார்.



ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திருச்சி ஜட்கா வண்டிக் காரர்கள் சங்கத்தில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. அவர்கள் தங்கள் சங்க ஆண்டுவிழா கூட்டத் திற்கு தலைமை வகிக்கு மாறு அவரை கேட்டுக் கொண்டார்கள். ஆண்டு விழா கூட்டம் துவங்கியது. தலைமையுரையாற்ற என்.எஸ்.கிருஷ்ணன் எழுந்தார். கலைவாணரின் பேச்சு கற்கண்டை போல் இனிமை யுடையது. எல்லோரும் அவரையே பார்த்தார்கள். கலைவாணர் தம் பேச்சை துவக்கினார். ……உங்களைப் போல நல்ல உள்ளம் கொண்ட மக்களிடையில் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எங் கெல்லாம் சுற்றியிருக்கிறேன்... ஆனால் உங்களைப்போல் பரந்த நோக்கும் பெருங் குணமும் பெற்ற மக்களை நான் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் இந்த காலத்தில் பொறhமை யும், பூசலுமே நிலவ காண்கிறேhம். ஆனால் நீங்கள் மட்டும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறீர்கள். உங்களிடம் எனக்கு நிரம்ப பிடித்தது இதுதான், நீங்கள் வண்டியில் யார் ஏறினாலும் சரி, நீங்கள் சொல்லக்கூடிய முதல் வார்த்தை …முன்னுக்கு வாங்கோ, முன்னுக்கு வாங்கோ† என்பதுதான். இந்த காலத்தில் யார்தான் இப்படி சொல்கிறhர்கள்†† என்று கூறினார். சபை முழுவதும் சிரிப்பொலி வெடித்தது*

Thanks: Dinakaran
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அலமாரி........... - by SUNDHAL - 08-26-2005, 03:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)