10-28-2003, 01:35 PM
kuruvikal Wrote:இதென்ன பாருங்கோ சிவாந்தி என்பவருக்கூடாக பணிப்பாளரும் சாதனை படைகிறாரோ......அப்ப சாதனையை பதியிற கின்னசுக்கும் சிவாந்தி என்றும் கடமைப்பட்டவர் என்று சொல்லுவியள் போல....!எது எப்படியோ இலங்கை வானொலிதான் இனங்கண்டு அறிவிப்பாளராக்கியது...அதுக்குப் பிறகுதான் மிச்சதெல்லாம்...யாழ் மணிகுரலில வேலை செய்து போட்டு இலங்கை வானொலியில் இடம் பிடிச்சவுடனே தங்களின் திறமையைப்பற்றி பறையடிக்கிறவையும் இருக்கினம்...!ஒண்டு சொல்லுறம் திறமையை இனங்காண்பது நேயர்களே அன்றி பணிப்பாளரும் பணிபுரிபவரும் அல்ல.....!
அப்படியென்றால் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் 123 மணித்தியாலங்களும் அவர் தனியாகக் குரல் கொடுத்து தனது சொந்த வீட்டீலிருந்து எல்லாம் செய்வது போன்றல்லவா இருக்கிறது.
<b>இன்று அதிகாலை நிகழ்ச்சியின் போது அவர் மயக்கக் கலக்கத்தில் வரும் நேயர்களுக்கெல்லாம் தவறான வார்த்தைகளைப் பாவித்துப் பேசித்தள்ளிய போதும் சரி, மயக்கம் போட்டு கீழே சரிந்த போதும் சரி சிவாந்தி அக்கா,சிவாந்தி அக்கா என்று நேரடியாகவே வானலையில் உருக்கத்துடன் கத்திக் குளறி அவரை எழுப்பியெடுத்து ம்..ஆம்..ஆமாம் மாத்திரம் 45 செக்கன்களுக்கு ஒரு தடவையாவது பேச வைத்த கூட இருந்த அறிவிப்பாளர்கள் எல்லாம் என்ன பொம்மைகளா?</b>
என்ன நடக்கின்றது? என்று நேயர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையென்று அவர் எடுத்தெறிந்து மயக்கத்தில் பேசினாலும் அவரது நிலையை உணர்ந்து தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வரும் நேயர்கள் எல்லாம் என்ன ... பிண்டங்களா?
அதுவும் போக கிண்ணஸ் காரர்களுக்குப் பணம் கட்டித்தான் சாதனை முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்.அவர்களுக்குக் கடமைப்படவேண்டிய தேவையில்லை.
யார் வேண்டுமானாலும் நன்றி கெட்ட விதத்தில் கதைக்கலாம். ஆனால் தனது நிர்வாகத்தினை தவறாகப் பாவித்து,மோசடி செய்த ஒருவரை வெளியேற்றிய பின்னர்,
சாதனையை இவர் நிறைவேற்ற வேண்டும் என்ற நல்ல மனதோடு அவருக்கு 31ம் திகதி வரை காலக் கெடு கொடுத்து மீண்டும் அனுமதித்தது மாத்திரமன்றி தன்னை இவர் மதிக்காவிட்டாலும் பரவாயில்லை என்று செய்திகளை வாசிப்பதற்காக மட்டும் வானொலிக்குள் சென்று வந்து கொண்டிருக்கும் <b>நல்ல மனிதரை மறப்பதென்பது ...... என்ன ரகம்?
எனவே சிவாந்தியின் சாதனையில் அவருக்கு பங்கு வேண்டும் என்பது அல்ல இங்கு கதை. அதை குருவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அவரும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்.சுட்டிக்காட்டப்பட வேண்டியவர்,அத்திவாரமாக இருந்தவர்,மதிக்கப்பட வேண்டியவர் என்பதுதான்.
இதுவெல்லாம் இல்லாமல் அந்தர உலகில் வாழ்ந்து கொண்டு ஏதோ மந்திரத்தில் எல்லாம் நடப்பது போன்று உள்ளது உங்கள் கதை.
சுரதா அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது உண்மையில் நாளைய நாள் நடந்தால் கூட இதுவரை நடந்த எதுவும் பொய்யாகப் போவதில்லை.நேற்றைய நாள் என்பது கடந்துவிட்ட சரித்திரம்.[b]மாற்றியெழுத முடியாதது.</b> :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

