Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையக் காதல்
#1
<b>இது இலக்கியக் காதல் அல்ல
..................................
இணையக் காதல்
..................................
..................................</b>

"லினுக்ஸ்" பெண்ணே
"லினுக்ஸ்" பெண்ணே

"பி.எச்.பி" மொழியாலே
செய்த இணையத்தளம்
அன்பே நீயே தான்
புதிய தொழில்நுட்பம்

கண்கள் செய்யும் சில்மிசம்
"பிளாஷ் மூவி அனிமேசன்"
"த்ரி டி" கன்னஙகள்
ஆர்.யி.பி வண்ணங்கள்

சுரதாவின் யூனிக்கோட்
கொன்வேர்ட்டர் கொண்டுந்தன்
செல்லத் தமிழினை
மொழி பெயர்ப்பேன்

"எம்.பி த்ரி" பாடல் போல்
சிக்கனப் பேச்சை
"மீடியாப் பிளேயரில்"
ஒலி பரப்பு

"யாகூ"வின் துரித தூதரிடம்
என் காதல் செய்தி
கொடுத்தனுப்பி வைத்தேன்

மின்னஞ்சல் ஒவ்வொன்றாய்
திறந்து பார்த்து
உந்தன் பதிலைப்
பார்த்திருந்தேன்

"எம்.எஸ்.என்" மெசெஞ்சர்
காலையில் திறந்து
உன் வருகைக்காய்க்
காத்திருந்தேன்

"மை எஸ்குஎல்" தகவல்
வங்கி உன் இதயம்
என் காதல் உளறல்கள்
சேர்த்து வைப்பாய்

எந்தன் காதல் தரவிறக்கி
உந்தன் காதல் தரவேற்று
இல்லையென்றால்
உன்னை ஹாக் செய்து
களவெடுப்பேன் காதலியே!

படைப்பு: ~*`TECHNO-KAVI`*~ இளைஞன்

--------------------------------
லினுக்ஸ் =Linux =கணணி இயங்குதளம்
பி.எச்.பி =PHP =இணைய மொழி
பிளாஸ் மூவி அனிமேசன் =Flash Movie Animation =அசைபடம்
த்ரி டி =3D =முப்பரிமானம்
ஆர்.ஜி.பி =RGB =சிவப்பு, பச்சை, மஞ்சள்
எம்பி த்ரி =MP3 =(இணையத்திற்கான) இசைத்தரம்
மீடியாப் பிளேயர் =Media Player =ஒலி/ஒளிபரப்பு செயலி
யாகூ =Yahoo Messenger =துரித தூதர்
எம் எஸ் என் =MSN Messenger =துரித தூதர்
மை எஸ்குஎல் =MySQL =தகவல்வங்கி
ஹாக் =Hack =ஊடுருவல்
--------------------------------

பி.கு: இக்கவிதை இணையத்தில் அனுபவம் உள்ளவர்க்கு மட்டுமே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இரசிப்பதற்கு மட்டும். சிந்திப்பதற்கல்ல!


Reply


Messages In This Thread
இணையக் காதல் - by இளைஞன் - 10-28-2003, 01:14 PM
[No subject] - by Paranee - 10-28-2003, 01:34 PM
[No subject] - by nalayiny - 10-28-2003, 09:16 PM
[No subject] - by Ilango - 11-06-2003, 07:37 PM
[No subject] - by இளைஞன் - 11-08-2003, 02:34 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 03:28 PM
[No subject] - by kuruvikal - 01-30-2004, 04:07 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 04:16 PM
[No subject] - by kuruvikal - 01-30-2004, 04:29 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 04:34 PM
[No subject] - by kuruvikal - 01-30-2004, 04:41 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 06:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)