08-25-2005, 11:33 PM
<b>ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை</b>
அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை மடக்கொடியாம் மணிமேகலைகருளிய ஆபுத்திரனின் வரலாற்றை அறவணடிகள் கூறினார். வாரணாசியில் அபஞ்சிகன் என்ற ஏழைப் பிராமணனின் மனைவி சாலி என்பவள் சந்தர்ப்ப வசத்தால் கற்பிழந்து விடுகிறாள். இந்தப் பாவத்தை போக்க தெற்கே கன்னியாகுமாரி முனை சென்று தீர்த்தமாடிச் செல்ல எண்ணிப் புறப்பட்டாள். ஒவ்வொரு ஊராகத் தங்கி தங்கி வந்தாள். அப்போது அவள் சூல் கொண்டிருந்த காரணத்தால் அவளால் மேலும் நடக்க முடியவில்லை. பாண்டி நாடு வந்த அவள் கொற்றாகைகருகே ஒரு தோட்டத்தில் ஆண் குழந்தையை ஈன்றாள். அவள் செய்த பாவச் செயலால் அந்தக் குழந்தையை பேணி வளர்க்க முடியாத நிலையில் சென்றாள். அந்த குழந்தை அழுதவண்ணம் இருந்தது. இதைக் கண்ட பசு ஒன்று பசித்து அழுது கொண்டிருந்த அக்குழந்தைக்கு தனது மடி பாலைக் கொடுத்தது.
அவ்வழியால் வந்த பூதி என்னும் பெயர் கொண்ட அந்தணன் அக்குழந்தையை எடுத்து ஆபுத்திரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வேள்வி என்ற பெயரால் பசுவை கொலை செய்து வரும் படுபாதகச் செயல்களை அவன் வெறுத்தான். இதனால் அவன் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி அவ்வூரை விட்டு துரத்தப்பட்டான். அந்த ஊரை விட்டு தென்மதுரை சென்று இரந்து கிடைத்ததில் பெரும் பங்கை கூன் குருடு எதுவுமே இயலாத ஏழையர் இஅவ்ர்களுக்கு அளித்து , மிஞ்சியதைத் தான் உண்டு வந்தான். நம் வயிற்றை வளர்ப்பதுக்கு மட்டுமல்லாது பிறர் வாழவும் கையேந்தினான். நோயால் துடித்து துவண்டவர்களுகெல்லாம் உதவினான்; அவர்களின் துரம் போக்கி ஒரு நிம்மதியைக் கண்டான்.

<b> .. .. !!</b>