08-25-2005, 08:28 PM
<b>பாத்திரம் பெற்ற காதை</b>
மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரங்களை உரைத்து சென்ற பின்னர், மணிமேடலை ஓரளவு நிம்மதியுடன் அந்த தீவிலே உலவி வந்தாள். அவளுக்கு தன்னிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. முன்னர் அவள் உள்ளத்தில் இருந்துவந்த பயம் அவளை விட்டு நீங்கிவிட்டத்ய். மணிமேகலை அந்தத் தீவில் உலவிக் கொண்டிருக்கும் போது தீவதிலகை என்ற பெண் தோன்றினாள். அவள் யாரெனக் கேட்டதும் மணிமேகலை எல்லா உண்மையையும் சொன்னாள். மணிமேகலை தன்னைப் பற்றிக் கூறி மணிமேகலா தெய்வம் தூக்கி வந்து அருள் செய்வதை கூறியதும். மணிமேகலைபற்றி உயர்ந்த எண்ணாத்தை தீவதிலகை கொண்டாள். என்வே மணிமேகலையிடம் தன்னைப் பற்றி தெரிவித்தாள்.
தருமத் தலைவனாம் புத்த பெருமானது நல்லறத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் இந்தப் புகழ் பெற்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதால் நன்மைகளையெல்லாம் அடைவார்கள். தமது பழைய பிறப்பு உணர்வைப் பெறுவார்கள். எனினும் இங்கு வந்து இந்த புத்த பீடிகை முன்னால் குவளையும் நெய்தலும் நெருங்கி மலர்ந்து ஒளி விடும் கோமுகி என்னும் சிறப்பு கிக்க பொய்கை ஒன்று உள்ளது. புத்தபிரான் அவதரித்த நாளில் அமுதசுரபி என்னும் அருள் நிறைந்த உணவு வழங்கும் பாத்திரம் இந்த பொய்கைல் வெளிவந்து காணப்படும். இவ்வாறு அமுதசுரபி தோன்றும் அந்த ஒப்பற நாள். இந்நாள் தான். இதைப்பற்றி மேலதிக விவரம் தேவையாயின் நீ அறவணடிகளிடம் கேட்டு தெரிந்து கொள். என்றாள். மணிமேகலை இதை கேட்டு மகிழ்ந்தவளாய் மீண்டும் அந்தப் புத்த பீடிகையை வணங்கி எழுந்தாள்.
புத்த பீடிகையை உள்ளமுருக வேண்டிய மணிமேகலை, பின்னர் தீவதிலகையுடன் அவள் குறிப்பிட்டுக கூறீய புனித பொய்கையை அடைந்தாள். மணிமேகலை அந்த பொய்கைய சென்று வணங்கி நின்றதும் பொய்கையின் நடுப் பக்கத்திலிருந்து எழுந்த அமுதசுரபி விரைவாக மணிமேகலையின் கைகளை அடைந்தாள். அள்ள அள்ள குறையாது அமுதத்தை வழங்கும் அமுதசுரபி கிடைத்ததும் தீவதிலகை மணிமேகலையிடம் பசிப்பிணியின் கொடுமை பற்றிக் கூறினாள்.அவளுக்கு கிடைத்த அற்புத அமுதசுரபி மூலம் எண்ணற்றோரின் பசிபிணியை போக்குமாறு வேண்டினாள். உணவுக்கு ஏங்கும் அவல நிலை இனி இருக்க கூடாது என மணிமேகலை முடிவு செய்தாள்.
தெய்வம் கூறிய ஏழு நாட்கள் கழிந்து விட்டனவே இதுவரை மணிமேகலை வரக் காணோமே என மாதவி புத்தர் பள்ளியில் வாடிப் போய் நின்றாள். அதே நேரத்தில் மணி பல்லவத்தில் தீவதிலகை மணிமேகலையை புகாருக்கு புறப்படச் சொன்னாள். புத்தபீடிகையயும் தீவதிலகையும் வணங்கி கையில் அமுத சுரபியுடன் வானத்தின் வழி புறப்படும் மந்திரத்தை உச்சரித்த வண்ணாம் புறப்பட்டாள்.புகாரை அடைந்த மணிமேகலை தனது அவ்ர்களது முற்பிறப்பை பற்றி கூறி அந்த அமுதசுரபுயை வணங்குமாறு வேண்டினாள். மணிமேகலைத் தீவில் நடந்த நிகழ்ச்சியை கேட்ட அவர்கள் வியப்பும் மகிழ்வும் அடைந்தார்கள்.

<b> .. .. !!</b>